animated gif how to

தென் கொரிய முஸ்லிம் அமைப்புடன் இலங்கை முஸ்லிம்களின் தென் கொரிய அமைப்பு இணைவு

February 17, 2012 |

தென் கொரியாவில் உள்ள இலங்கை முஸ்லிம்களின் அமைப்பான SLMA (Sri Lanka Muslim Association – South Korea) தென்கொரிய முஸ்லிம் ஒன்றியமான KMF (Korean Muslim Foundation) உடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக SLMA இன் இணைப்பாளர் மீள்பார்வை இணைய தளத்திற்குத் தெரிவித்தார்.
அதன் முதற்கட்டமாக KMF யின் Busan நகர கிளையுடன் SLMA கிளை இணைந்து SLMA-Busan என்ற ஒர் அமைப்பை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அவ்வமைப்பின் அங்குரார்ப்பன நிகழ்வு எதிர்வரும் 19.02.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு பூஸான் பள்ளிவாசலின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக அவர் கூறினார்.

இவ்வங்குரார்ப்பன கூட்டத்திற்கு பிரதம அதிதியாக பூஸான் பெரிய பள்ளிவாயலின் பிரதம இமாமும் KMF இன் பூஸான் கிளைத் தலைவருமான இமாம் யாஸீன் லீ அவர்களும், கொரியாவில் வாழும் இலங்கை முஸ்லிம் பிரமுகர்கள், KMF இன் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!