animated gif how to

சமுதாயத்தின் பிரச்சினைகளுக்கு இறை தூதரிடம் தீர்வு உண்டு

February 05, 2012 |


உலகளாவிய ரீதியிலும் உள்நாட்டிலும் மனித சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு திருக்குர்ஆனிலும்,  இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்விலும் தீர்வுகள் உள்ளன. இவ்வாறு மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில் நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஹக்கீமின் மீலாத் தினச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, அமைதியை யும், நிம்மதியையும் இழந்து பிரச்சினை களால் சூழப்பட்டு சிக்கல்களில் அகப்பட் டுள்ள மனித சமுதாயத்திற்கு இஸ்லாத்தில் உரிய தீர்வுகள் உள்ளன.

நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள், இறைவன் திருக்குர்ஆனின் ஊடாக அருளிய போதனைகளை தம் வாழ்வில் மிகவும் வெற்றிகரமாக நடை முறைப்படுத்தி முஸ்லிம்களுக்கு மட்டுமல் லாது முழு மனித சமுதாயத்திற்கும் சிறப்பான வழிகாட்டுதலை வழங்கினார்கள்.
குறிப்பாக, இன்றைய முஸ்லிம் உலகம் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கும், சோதனைகளுக்கும் முகம் கொடுத்துள்ள மிகவும் இக்கட்டான சூழ்நிலையில், மேற்குலகின் அச்சுறுத்தல்கள் அதிகரித் துள்ள இவ் வேளையில் இஸ்லாம் வழங்கும் தீர்வுகளின் பக்கம் முழுக் கவனத்தையும் செலுத்தி இதய சுத்தியோடும், இறை விசுவாசத்தோடும் செயல்பட வேண்டிய தேவை முன் எப்போதையும் விட இப்பொழுது அதிகமாக ஏற் பட்டுள்ளது.
இலங்கையைப் பொறுத்த வரையிலும் குறிப்பாக வடகிழக்கிலும், பொதுவாக நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் வசிக்கும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் இஸ்லாத்தின் அடிப்படையில் உரிய தீர்வுகளை காண முன் வருவோமாக.


0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!