இலங்கை முஸ்லிம்களுக்கு இன்றைய தினத்தில் இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். உலகம் முழுவதும் உள்ள சகோதரர்களோடு இணைந்து முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளான மீலாதுன் நபியை இலங்கை முஸ்லிம்கள் கொண்டாடுகிறார்கள்.
நாட்டில் சகல பகுதிகளிலும் துரித அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதியான இன்றைய சூழலில், சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் நபிகளாரின் போதனைகள் மிகவும் பொருத்தமானதாகும்.
சகோதரத்துவம், பரஸ்பரப் புரிந்துணர்வு, வன்முறைகள் இல்லாத அமைதியான வாழ்க்கை ஆகியவற்றையே இஸ்லாம் ஊக்குவிக்கின் றது. கூட்டுறவையும் சகிப்புத் தன்மையையும் அது போதிக்கின்றது. இஸ்லாத்தின் இப்போதனைகள் இன்றைய உலகில் காணப்படும் வன்முறை மற்றும் பயங்கர வாதத்தை நிராகரிப்பதற்கு வழிகாட்டுவதுடன் உன்னதமான மானிடப் பெறுமானங்களை யும் ஊக்குவிக் கின்றது.
எனவே, முஹம்மத் நபி (ஸல்) அவர் களின் போதனைகளின் ஒளியில் சகிப்புத் தன்மை, புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கம் நிறைந்த புதியதோர் இலங்கையை நாம் கட்டியெழுப்ப முடியும். அது இலங்கையை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்ல உதவும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் உள்ள முஸ்லிம்கள் இந்த முக்கியமான நிகழ்வை அமைதியாகக் கொண்டாடும் சூழல் ஏற்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது.
நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் துரித அபிவிருத்தி செயன்முறைகளின் மூலம் அவர்கள் தங்களைச் சூழ துரித மாற்றங் களைக் கண்டு வருகின்றார்கள். இது இவ்வருட மீலாத் கொண்டாட்டங்களை மிகவும் அர்த்தம் நிறைந்தவகையில் கொண்டாடுவதற்கான வாய்ப்பை அவர் களுக்கு அளித்துள்ளது.
இன்றைய முக்கிய தினத்தில் இலங்கை முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு நான் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரி வித்துக் கொள்கிறேன். உலகெங்கிலும் சமாதானத்தையும் சகிப்புத்தன்மையை யும் கொண்டுவருவதற்கான அவர்களது பிரார்த்தனைகளில் நானும் இணைந்து கொள்கின்றேன்.
0 கருத்துரைகள் :
Post a Comment