animated gif how to

உலகில் முதல் முதலாக கட்டப்பட்டு இன்றுவரை தொடர்ந்து நடைபெற்றுவரும் பல்கலைக்கழகம்

February 22, 2012 |

இன்றைய மொரோக்கோ நாட்டில் உள்ள பெஸ்(fes) என்ற இடத்தில் அமைந்துள்ள அல்-கரவிய்யின் (Al-Qarawiyyin) பல்கலைக்கழகம் தான் உலகில் முதன் முதலாக கட்டப்பட்ட பல்கலைக்கழகம்.

இந்த பல்கலைகழகம் கட்டப்பட்டது கி பி 859.இந்த பலகலைகழகத்தில் ஆன்மிகம் மற்றும் நவீன கல்வி முறை இரண்டும் பயிற்றுவிக்கப்படுகிறது.இந்த பலகலைகழகத்தில் பல அறிவயல் கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்த அறிவியலாளர்கள் பயின்றுள்ளனர்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன வென்றால் இந்த பல்கலைகழகத்தை கட்டியதே ஒரு பெண் என்பதுதான்.அந்த பெண்ணின் பெயர் பாத்திமா அல் பிஹ்ரியா (Fatima al-Fihria) என்பதாகும்.இஸ்லாம் பெண்களுக்கு கல்வியை மறுக்கிறது என்று ஐரோப்பியர்களால் இன்று கட்டுக்கதைகள் கட்டப்பட்டு வருகின்றன.இவர்கள் கூறுவது போல் இஸ்லாம் ஒன்றும் பெண்களுக்கு கல்வியை மறுக்கவில்லை என்பதை பறைசாற்றுவதுதான் உலகின் முதன் முதலாக கட்டப்பட்ட இந்த பல்கலைகழகம்.உலகில் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டப்பட்ட பல்கலைகழகங்கள் எவை எங்கு உள்ளன என்று உங்களுக்கு தெரியுமா.இதிலும் பல ஆட்சரியங்கள் உள்ளன.



NSAK

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!