வடகிழக்கு எகிப்தில் துறைமுக நகரமான ஸஈதில் கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட கலவரத்தில் 73 பேர் பலியானார்கள். எகிப்தின் முதல்தர கால்பந்து கிளப்பான அல் அஹ்லிக்கும், பாரம்பரிய எதிர் அணியான அல் மிஸ்ரிக்கும் இடையே நேற்று(புதன் கிழமை)நடந்த போட்டிக்கு பிறகு ஸ்டேடியத்தில் வன்முறை வெடித்தது. விளையாட்டு வீரர்கள் உள்பட ஏராளமானோர் காயமடைந்தனர்.
நேற்று நடந்த கால்பந்து போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் அல் அஹ்லி தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து அல் மிஸ்ரி கிளப்பின் ரசிகர்கள் ஸ்டேடியத்தில் கலவரத்தில் ஈடுபட்டனர். அல் அஹ்லியின் வீரர்களையும், ரசிகர்களையும் தாக்கினர். முன்பு இதுபோல இரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் கலவரம் ஏற்பட்டுள்ளது.
ரசிகர்களை கட்டுப்படுத்த ஸ்டேடியத்தில் போதுமான போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. இச்சம்பவத்தை தொடர்ந்து வியாழக்கிழமை பாராளுமன்றத்தின் அவசர கூட்டம் நடைபெறும் என தேசிய செய்தி ஏஜன்சி அறிவித்துள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment