சவூதியில் பெண்களுக்கான ஆடை, அணிகளை விற்பனை செய்யும் கடைகளில் ஆண்கள் பணியாற்றுவதற்கு தடைவிதிக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நடைமுறையால் பல ஆண்கள் தங்களது வேலை வாய்ப்புகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே 2006 ஆம் ஆண்டு சட்டமானது பெண்களுக்கான ஆடைகள் மற்றும் அணிகளை விற்பனை செய்யும் நிலையங்களில் ஆண்கள் பணியாற்றுவதற்கு தடை விதிக்கின்ற போதும் அந்த சட்டம் ஒரு போதும் நடைமுறைப்படுத்தப்படாதிருந்தது.
இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 28,000 பெண்கள் வேலைகளுக்கு விண்ணப்பித்திருப்பதாக அந்நாட்டு தொழிற்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
பல நிலையங்களில் தற்போது பெண்கள் வேலை செய்யத்துவங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துரைகள் :
Post a Comment