மலேசியாவின் எதிர்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹீம்(வயது 64) இயற்கைக்கு முரணான பாலியல் வழக்கில் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இரண்டு வருட விசாரணைக்குப் பிறகு இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டி.என்.ஏ(மரபணு சோதனை) டெஸ்டில் அன்வர் குற்றமற்றவர் என நிரூபணமானது என நீதிமன்றம் கூறியது. கடந்த 2009-ஆம் ஆண்டு அன்வர் இப்ராஹீம் மீதான விசாரணை துவங்கியது.
இறுதியில் நீதி கிடைத்துள்ளதாக அன்வர் இப்ராஹீம் நீதிமன்ற தீர்ப்பை குறித்து பதிலளிக்கையில் தெரிவித்தார். தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில் அன்வர் இப்ராஹீம் மீதான வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
2008-ஆம் ஆண்டு நடந்த தேர்தலுக்குப் பிறகு அன்வர் இப்ராஹீம் மீதான குற்றச்சாட்டு வலுத்தது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் நீதிமன்றத்தில் தீர்ப்பை அறிவதற்காக திரண்டிருந்தனர்.
0 கருத்துரைகள் :
Post a Comment