எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின்(இஃவானுல் முஸ்லிமீன்) அரசியல் பிரிவான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் பார்டி (FJP)ஆட்சியை பிடிப்பது என்பது உறுதியாகியுள்ள சூழலில் இஃவானுல் முஸ்லிமீனுடன் நெருங்குவதற்கான முயற்சிகளை அமெரிக்கா துவக்கியுள்ளது.
ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சிக் காலக்கட்டத்தில் தடைச் செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய கட்சியாக முன்னேறி வருகிறது.
இஃவானுல் முஸ்லிமீனை ஒடுக்குவதற்கு முபாரக் அரசிற்கு முன்பு ஆதரவு அளித்த அமெரிக்காவிற்கு, அரபுலகில் உருவாகி வரும் புதிய சூழல் அவ்வமைப்புடன் உறவை ஏற்படுத்தாமல் வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ளியுள்ளது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
எகிப்து பாராளுமன்ற தேர்தலின் மூன்று கட்டங்கள் முடிந்த வேளையில் இஃவானுல் முஸ்லிமீனின் எஃப்.ஜெ.பியும்,ஸலஃபிகளின் அந்நூர் கட்சியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளன.
இஃவானுல் முஸ்லிமீனுடன் அமெரிக்கா உறவை ஏற்படுத்த முயல முக்கிய காரணம், இஸ்ரேலுக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான். ஆகையால் பழைய பகையை மறந்து புதிய உறவை ஏற்படுத்த அமெரிக்கா முயன்று வருகிறது. இதன் பலனாக, இஸ்ரேலுடன் கையெழுத்திட்ட 1979-ஆம் ஆண்டின் அமைதி ஒப்பந்தத்தை மதிப்போம் என இஃவானுல் முஸ்லிமீன் உறுதி அளித்துள்ளது என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நியூலண்ட் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார்.
இஃவானுல் முஸ்லிமீனுடன் அமெரிக்க மத்தியஸ்தர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த உறுதி அளிக்கப்பட்டது என நியூலண்ட் கூறினார். ஆனால், இதனை இஃவானுல் முஸ்லிமீன் தலைமை உறுதிச்செய்யவில்லை.
கடந்த 2005-ஆம் ஆண்டு இஃவானுல் முஸ்லிமீன் உள்ளிட்ட அரபு பிராந்தியத்தின் இஸ்லாமிய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு அமைப்பு அழைப்பு விடுத்தது. ஆனால், முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் w புஷ் அந்த அழைப்பை நிராகரித்துவிட்டார். இஃவானுல் முஸ்லிமீனுடன் நெருங்குவதற்கான முயற்சி தொடரும் என எகிப்தில் பாராளுமன்ற தேர்தல் துவங்கும் முன்பு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் கூறியிருந்தார்.
-தூது-
0 கருத்துரைகள் :
Post a Comment