பலஸ்தீனில் மேலும் ஒரு ஹமாஸ் தலைவரை இஸ்ரேல் ராணுவம் கடத்திச் சென்றது. ஹமாஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல் ஜாபிர் ஃபுகாகாவை ராமல்லாவில் வீட்டில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை இஸ்ரேல் ராணுவம் கடத்திச் சென்றதாக ஹமாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒருவாரத்திற்கு இடையே இஸ்ரேல் ராணுவம் கடத்திச் செல்லும் ஐந்தாவது பாராளுமன்ற உறுப்பினர் ஃபுகாகா. நேற்று முன்தினம் ஜெருசலத்தில்
கிழக்கு அல் குத்ஸில் ரெட்க்ராஸ் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த இஸ்ரேல் ராணுவம் முன்னாள் ஹமாஸ் அமைச்சர் காலித் அபூ அரஃபா மற்றும் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினர் அஹ்மது துத்தா ஆகியோரை கைது செய்தது.தங்களின் 45 பாராளுமன்ற உறுப்பினர்களில் 24 பேர் இஸ்ரேல் ராணுவத்தின் பிடியில் இருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment