எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பி.எல்.சி.தனது நிறுவனத்தின் பங்கு தாரர்களுக்கு இடையில் இடைத் தொடர்பினை பேணும் வகையிலமைந்த புதிய முன்னெடுப்பின் கீழ் தனது சமூக வலைத்தள இணையவழி பிரிவுகளை அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளது. நிறுவனம் சார்பான விடயங்களை வெளிப்படுத்தவுள்ள கூட்டாண்மை வலைப்பூ (Corporate Blog) ஒன்றினை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்த எக்ஸ்போலங்கா ஆனது முழுமையான சமூக வலைத்தள இடைத்தொடர்பினை பேணிக்கொள்ளும் நோக்கில் பேஸ்புக், டிவிட்டர், யூடியுப் போன்றவற்றில் உத்தியோகபூர்வ இணையவழி பிரிவுகளை திறந்துள்ளது.
சமூக வலைத்தள அங்குரார்ப்பணம் தொடர்பில் எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி ஹனீப் ய+சுப் கூறுகையில், 'நாம் ஒன்றிலொன்று சார்ந்திருப்பதற்கு அவசியமற்ற வகையிலான, பல்வகைப்பட்ட வர்த்தகங்களில் ஆர்வத்தினை கொண்டிருப்பதுடன் வர்த்தகம் மற்றும் சமூகத்தின் வேறுபட்ட பிரிவுகளைச் சேர்ந்த பங்குதாரர்களையும் கொண்டுள்ளோம். இந்நிலையில், நிறுவனத்துடன் தொடர்புபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களையும் ஒன்றிணைப்பதற்கான மிகச் சிறந்த வாய்ப்பினையும் அதேநேரம், இடைத்தொடர்புபட்டதும் அடைந்து கொள்ளக்கூடியதுமான வழிமுறை ஒன்றின் ஊடாக ‘எக்ஸ்போ’ வர்த்தக குறியீட்டினை அவர்களுக்கு வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பத்தையும் இப்புதிய சமூக வலைத்தள முன்னெடுப்பானது எமக்கு வழங்குகின்றது' என்றார்.
KPMG International நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச அளவிலான (Going Social, 2011) ஆய்வின் பிரகாரம், பெரும்பான்மையான வர்த்தக நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களுடனான உறவுகளை பலப்படுத்திக் கொள்வதற்காக சமூக வலைத் தளங்களை பயன்படுத்துகின்றன. அரைவாசிக்கும் அதிகமான நிறுவனங்கள் தமது உற்பத்திகள் மற்றும் சேவைகளில் புத்தாக்க முயற்சிகளை முன்கொண்டு செல்வதற்காகவும் அத்துடன் ஊழியர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்காகவும் தமது சமூக வலைத்தள பாவனையை விஸ்தரித்துள்ளன. அதேநேரம், சமூக வலைத்தளங்களில் பரந்துபட்ட வகைகளிலான வர்த்தகம்சார் பயன்பாடுகளை நிறுவனங்கள், தேடிய வண்ணம் இருக்கின்றமையும் தெரியவந்துள்ளது.
அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அதன் ஒரு பகுதியாக, அபிவிருத்தி அடைந்த சந்தைகளின் போட்டிச் சூழலில் முன்னேறிச் செல்வதற்கான இன்னுமொரு வாய்ப்பினை சமூக வலைத்தளங்கள் வழங்குகின்றன என்பதை, தோற்றம் பெற்று வருகின்ற சந்தைகளில் தொழிற்படுவோர் மிக விரைவாக கண்டறிந்து கொள்வதாக தெரிகின்றது. இன்னும் சில நிறுவனங்களைப் பொறுத்தவரை செயற்றிறன் அற்ற, நம்பத் தகாத அல்லது கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்த முறைகள் எல்லாம், அதி விரைவானதும் மிகவும் தொடர்ச்சியானதுமான சமூக வலைத்தள இணையவழி பிரிவுகளின் செயற்பாட்டின் காரணமாக தற்போது வழக்கிழந்து போயுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இடைத்தொடர்புபட்ட முறைமையின் ஊடாக தமது பங்குதாரர்களுக்கு தகவல்களை வழங்கும் வகையில் Corporate Blog ஒன்றினை ஆரம்பிப்பதற்கு எக்ஸ்போலங்கா தீர்மானித்தது. அச்சுப் பிரதி செய்யப்பட்ட சந்தைப்படுத்தல் பிரசுரங்களுக்கு புறம்பாக, கூட்டாண்மை நிறுவன மனித ஆளுமையின் கருத்தினை பங்குதார்கள் இதன்மூலம் கேட்டறிந்து கொள்ள முடிகின்றது. ‘துணிச்சலுடன் செய்து முடித்தல்’ மற்றும் தொழில்வாண்மைத்துவம் போன்ற எமது நிறுவனத்தின் மிக முக்கியமான தத்துவங்களுக்கு நெருக்கமாகவுள்ள பெறுமதிகள் தொடர்பிலான எமது கருத்துக்களை எடுத்துக் கூறுவதற்கான சந்தர்ப்பத்தையும் இது எமக்கு வழங்குகின்றது.
அத்துடன் எமது பங்குதாரர்கள் எம்மோடு இருபக்க அடிப்படையிலான உரையாடலை கிரமமாக மேற்கொள்வதற்கு இடமளிக்கும் ஒரு களமாகவும் தொழிற்படுகின்றது. சமூக வலைத்தளமானது, பெரும்பாலானவர்களினால் இலகுவில் பெற்றுக் கொள்ளதக்கதும் மிகவும் சாதகமானதுமான ஊடகமாக திகழ்கின்றமை நிரூபிக்கப்பட்டுள்ளது. எமது பங்குதாரர்களின் நலன்கருதி இந்த வசதியை பெற்றுக் கொடுப்பதே எமது தேவையாக இருந்தது” என்று எக்ஸ்போலங்கா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் கூட்டாண்மை தொடர்பாடல் தலைமை அதிகாரி பெடி வீரசேகர தெரிவித்தார்.
கூட்டாண்மை இணையத்தளம் மற்றும் வழக்கமான தொடர்பு ஊடகங்கள் வெளியனுப்பும் தகவல்களை, சமூக வலைத்தள இணையவழி பிரிவுகள் பூரணத்துவமாக்கும். அத்துடன் நிறுவனத்தின் வேறுபட்ட முக்கிய தரப்பினரை இடைத்தொடர்புபட்ட களம் ஒன்றில் ஒன்றிணைப்பதன் மூலம் ‘எக்ஸ்போ’ வர்த்தக குறியீட்டிற்கு முழுமையான பெறுமதியை சேர்க்கின்றது. எமது Blog இனை http://blog.expolanka.com என்ற இணைய முகவரியில் நீங்கள் வாசிக்கலாம். அதேநேரம் http://www.facebook.com/expolanka என்ற பேஸ்புக் முகவரி மற்றும் எமதுhttp://www.twitter.com/expolanka என்ற வுறவைவநச கணக்கு ஆகியவற்றின் ஊடாக நீங்கள் எம்முடன் இணைந்திருக்கலாம்.
எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. எக்ஸ்போலங்கா குழுமத்தின் ஹோல்டிங் (உரித்து) கம்பனியான இது, 1978ஆம் ஆண்டு செயற்பாடுகளை ஆரம்பித்தது. இந்த நிறுவனமானது, ஒரு பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனமாக கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் பிரதான தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. போக்குவரத்து, சர்வதேச வர்த்தகம், உற்பத்தி மற்றும் உபாய ரீதியிலான முதலீடு போன்ற பல்வகைப்பட்ட துறைகளில் வர்த்தகத்தை மேற்கொண்டுவரும் இக்குழுமம் 12 இற்கும் அதிகமான நாடுகள் மற்றும் 38 நகரங்களில் சர்வதேச பிரசன்னத்தை கொண்டிருப்பதுடன், 46 துணை நிறுவனங்கள் மற்றும் இணைந்த வர்த்தக முயற்சிகளையும் கொண்டியங்குகின்றது.
2011 மார்ச் 31ஆம் திகதி முடிவடைந்த நிதியாண்டில் எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. நிறுவனம் தேறிய இலாபமாக 1.3 பில்லியன் ரூபாவினை பெற்றுக் கொண்டது. எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. தொடர்பான மேலதிக விபரங்களை www.expolanka.com என்ற இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
0 கருத்துரைகள் :
Post a Comment