animated gif how to

ஈராக்கில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு மன்னிப்புகோரும் அமெரிக்கன்

January 01, 2012 |

ஈராக்கில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்திய போது அங்கு பிரிட்டன் படையில் இருந்த ரோஸ் கேபுட்டி என்னும் ராணுவ வீரர் தான் அந்த போரில் கலந்து கொண்டதற்காக மன்னிப்பு கூறியுள்ளார்.


இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது; ‘ஈராக்கின் ஃபலுஜா என்னும் இடத்தை இரண்டாவது தடவை முற்றுகையிட்டு இந்த வருடத்துடன் ஏழு வருடங்கள் ஆகிறது.
அமெரிக்க படைகள் அந்நகரத்தை அழித்ததுடன் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றனர். மேலும் பல ஆயிரக்கணக்கான மக்களை இடம் பெயரச் செய்தனர். மேலும் அந்த நகரில் வாழும் மக்களை கேன்சர் நோய்க்கு ஆளாக்கியதுடன் அங்கு பிறக்கும் குழந்தைகள் குறையுடனேயே பிறக்கின்றன’ என்று தெரிவித்துள்ளார்.

‘இது நடந்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டன ஆனால் எந்த காரணத்தை சொல்லி நாங்கள் தாக்குதலை மேற்கொண்டோமோ அது வெறும் பொய்யான நம்பிக்கை மட்டுமே. மேலும் அமெரிக்க வீரர்கள் இதுவரை தாம் எதற்க்காக பேர் செய்கிறோம் என்றும் யாரை எதிர்த்து போர் செய்கிறோம் என்றும் இன்னும் புரியாமல்தான் உள்ளனர்’ என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தானும் அந்த படையில் இருந்ததால் தனுக்கு அது நன்றாக தெரியும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தான் சேவை புரிந்த அமெரிக்கர்களுக்கு ஃபலுஜாவின் மக்கள் மனிததன்மை அற்றவர்களாகவும் அமெரிக்க படைகளை எதிர்த்து போராடுபவர்கள், தீவிரவாதிகள் என்றே நம்பி வருகின்றனர். ஆனால் தாம் மற்றவர்கள் போல் அல்லாமல் தாங்கள்தான் போர் தொடுப்பவர்கள் என்றும் தங்களின் நாடு ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்து ஃபலுஜா மக்கள் சண்டையிடுகின்றனர் என்றும் தாம் புரிந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் ஒரு ஃபலுஜா வாசியாக இருந்திருந்தால் தன்னுடைய நகரத்தையும் குடும்பத்தையும் காப்பதற்காக வெளிநாட்டு படையினரில் ஒருவரையாவது கொன்று இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய நெருங்கிய நண்பர்களான ட்ராவிஸ் மற்றும் பிராட்லி ஆகியோரையும் தாம் ஃபலுஜாவில் இழந்துள்ளதாகவும் கூறியுள்ள அவர் அவர்களின் மரணம் வீரமானது இல்லை என்றும் அது துன்பம் நிறைந்தது என்றும் கூறியுள்ளார். மேலும் தனது நண்பர்கள் பிறரை கொன்றதும் கொல்லப்பட்டதும் அரசியல் காரணங்களை முன்னிறுத்தியாகும் மேலும் இருவரும் அதற்கு பலியானவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் ஈராக் போரில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்கள் மரணம் குறித்து வருத்தம் தெரிவிக்கும் அதே வேளையில் ஃபலுஜாவில் போராடி உயிர் துறந்த ஈராக் வாசிகளுக்கும் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அமெரிக்க படைகளை சுதந்திரத்தின் பாதுகாவலர்கள் என்று கூறுவதில் தாம் முரண்பாடு கொள்வதாகவும் மேலும் தங்களை ஹீரோக்கள் என்று கூறுவதிலும் தாம் முரண்பாடு கொள்வதாகவும் தாங்கள் ஃபலுஜாவில் செய்தது ஹீரோ என்ற சொல்லிற்கே பொருந்தாத செயல் என்றும் அவர் வர்ணித்துள்ளார்.

மேலும் ஃபலுஜாவில் தாங்கள் தாக்குதல் நடத்தி அங்கு வசித்த மக்களின் உயிரை திரும்ப கொடுக்க முடியாது என்றும் மேலும் போர் தொடுத்தவர்கள் பலியானவர்களின் மீது தீவிரவாதிகள் என்று குற்றம் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக போராடுவதை குற்றம் சொல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்று தான் வியட்நாமிலும், ஆஃப்கானிலும் மற்றும் அமெரிக்காவின் பழங்குடியின மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு காரணம் சொல்லப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதே கதைகளைத் தான் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் மற்ற நாடுகளின் மீது போர் தொடுக்கும் போது கூறி தங்களுடைய தாக்குதலை நியாப்படுத்துகின்றன என்றும் ரோஸ் தெரிவித்துள்ளார். மேலும் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் யார்? தங்களுடைய பாதுகாப்பிற்காக போராடுபவர்கள் யார்? என்பதை புரிந்துகொள்வதே இன்றைய நிலையில் மிகவும் முக்கியமானதொரு தேவையாகும் என்றும் மேலும் தாம் ஃபலுஜா நகரை இரண்டாவது முறை முற்றுகையிட்டதில் தானும் பங்கு கொண்டதற்கு மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒருநாள் ஃபலுஜா வாசிகள் மட்டுமல்லாது முழு ஈராக் மக்களும் தங்களின் போராட்டத்தில் வெற்றி பெறு

1 கருத்துரைகள் :

Anonymous said...

Good Job guys….keep it up.

Post a Comment

Flag Counter

Free counters!