animated gif how to

காணி போலீஸ் அதிகாரம் தொடர்பில் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு என்ன ?

December 29, 2011 |

December 29, 2011.... AL-IHZAN Local News

Lankamuslim: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் துணை பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் அரசாங்கத்தின் காணி மற்றும் போலீஸ் அதிகாரங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வழங்குவது இல்லை என்ற தீர்மானத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உடன்படவில்லை என்று தெரிவித்துள்ளார்
மேலும் அவர் தெரிவித்துள்ள தகவலில் கடந்த 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற அனைத்து கட்சி மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ வடக்கு கிழக்கு பிரச்சினையை தீர்பதற்கு அதிகார பகிர்வு வழங்கபடும் என்று தெரிவித்திருந்தார் என்றும் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் அரசாங்கள் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் என்றும் நன்புவதகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை அரசுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான அடுத்த கட்டப் பேச்சின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிஸும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சின் கலந்துகொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரச தரப்பில் இருக்கும் மற்றுமொரு பிரதான முஸ்லிம் கட்சியான அமைச்சர் ரிசாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கடந்த ஒக்டோபர் மாதம் மாகாணசபைகளுக்கு காணி மற்றும் போலீஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென  வலியுறுத்தியுள்ளது என்ற தகவல்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது .


காணி மற்றும் போலீஸ் அதிகாரங்களை மாகாண மற்றும் மத்திய அரசாங்கங்கள் பகிர்ந்து கொள்வதனையே தமது கட்சி விரும்புவதாக கட்சியின் பொதுச் செயலளார் வை.எம். ஹாமீட் தெரிவித்திருந்தார் ,தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அமைக்கப்பட உள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இந்த யோசனைகளை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் அவர் குறிப்பிட்டிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.


எப்படி இருப்பினும் தற்போது உருவாகிவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ,அரசு முரண்பாடு அரசியல் சூழலில் முஸ்லிம் கட்சிகள் பகிரங்கமாக இன்னும் அதிகாரக பகிர்வு தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக காணவில்லை , வடக்கு , கிழக்கை பொறுத்தவரையில் வடக்கு கிழக்கு பிரிந்தால் முஸ்லிம் தரப்புக்கு தனியான அதிகார அலகு வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் அது கிடைக்க வாய்ப்பு இல்லாதபோது வடக்கு , கிழக்கு பிரிந்திருப்பதே மிக சிறந்தது என்ற நிலைபாட்டில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கிறது.


ஆனால் வடக்கு கிழக்கு இணைப்பை பற்றி அரசு பேசினால் அரசியல் இருந்து வெளியேறுவேன் என்ற நிலைபாட்டை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதியமைச்சர் எம் .எல் .ஏ.எம் .ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார் .அதே நிலைப்பாட்டில் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் மக்கள் காங்கிரசும் இருப்பதாகவே தெரிகின்றது.


வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் தமிழ் கட்சிகளை போன்று முஸ்லிம் கட்சிகள் மத்தியிலும் ஒருமித்த கருத்துகள் இல்லை அனால் மாகாணங்களுக்கு என்ன அதிகாரங்கள் வழங்கப் படவேண்டும் என்ற விடயத்தில் காணி , மற்றும் போலீஸ் அதிகாரம் தொடர்பில் கருத்துகளை முன்வைத்து வருகின்றபோதும் அதிகார பகிர்வின் வடிவம் தொடர்பில் தீர்க்கமான மாதிரியை அவைகள் முன்வைக்கவில்லை. இதற்கு முஸ்லிம் கட்சிகளிடமுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்று அல்லாமல் நெகிழும் அரசியல் தன்மை’ காரணமாக இருக்கின்றது என்று கூறமுடியும் ஆனால் உருவாகிவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ,அரசு முரண்பாடு அரசியல் சூழலில் நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களின் நலன்களை பேணும் தெளிவான நிலைப்பாட்டை  முஸ்லிம் கட்சிகள் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!