animated gif how to

எகிப்தில் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு துவங்கியது

December 16, 2011 |

December 16, 2011.... AL-IHZAN World News

கெய்ரோ: ஹுஸ்னி முபாரக்கை வெளியேற்றிய பிறகு நடைபெறும் முதல் தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நேற்றுமுன்தினம் துவங்கியது.


கிஸாவில் பிரமிடுகளுக்கு அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் காலையில் வாக்காளர்களின் நீண்ட வரிசை காணப்பட்டது. ஒன்பது மாகாணங்களில் நடைபெறும் வாக்குப்பதிவு இன்றும் தொடரும்.

மெனுஃபியா, ஷார்க்கியா, பெஹீரா, இஸ்மாயிலியா, சூயஸ், ஸொபாஹ், அஸ்வான் ஆகிய இடங்களில் பெரும் மக்கள் திரள் வாக்குப்பதிவில் கலந்துகொண்டனர். ஆனால், முதல் கட்டத் தேர்தலைப் போல அதிக வாக்குப்பதிவிற்கு சாத்தியமில்லை என கருதப்படுகிறது.

499 உறுப்பினர்களை கொண்ட கீழ் சபையில் 180 இடங்களுக்கு நடைபெறும் இரண்டாவது கட்ட தேர்தலில் இரண்டு கோடி பேர் தங்களது வாக்குரிமையை நிறைவேற்றுவர். அடுத்த மாதம் துவக்கத்தில் இறுதி கட்ட தேர்தல் நடைபெறும். ஒருவர் மூன்று வாக்குகளை அளிக்கவேண்டும். இரண்டு வாக்குகள் தனி நபர்களுக்கும், ஒரு வாக்கு கட்சிக்கும் அளிக்கவேண்டும்.


முபாரக்கின் சர்வாதிகார ஆட்சியில் மிக அதிகமாக அடக்கி ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சி (FJP) வெற்றிபெறும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!