December 10, 2011.... AL-IHZAN Local News
பாகிஸ்தான் மக்களின் மனம் நோகும்படி வெள்ளைக்காரர்கள் நடந்து கொண்டால் கப்பலில் ஏறி வெள்ளைக்காரர்கள் தங்களுக்கென தனி நாடு தேட வேண்டிவரும் என அமைச்சர் மேர்வின் சில்வா மிரட்டியுள்ளார்.
பாகிஸ்தான் மீதான நேடோ படைகளின் தாக்குதலை கண்டித்து கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
"சீனா, ரஸ்யா உள்ளிட்ட பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஸ் ஆகிய ஆசிய நாடுகள் வெள்ளைக்காரர்களுக்கு எதிராக எம்முடன் மிகவும் வலுவான உறவாக இருந்தனர். அதனை மறக்க முடியாது. பாகிஸ்தானுக்கு ஏதாவது மனக்காயம் ற்படுமாயின் உலகில் உள்ள எந்தவொரு சண்டியருக்கும் நாம் அஞ்ச மாட்டோம். வெள்ளைக்காரர் மண்டியிட்டு மன்னிப்புக் கோர வேண்டும்.
உலகில் அதிகமானோர் இஸ்லாமிய தர்மத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். அவ்வாறான தர்மத்தை உடைய இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வெள்ளைக்காரர்கள் தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது. அதற்கு நான் உள்ளிட்ட இலங்கையர் இடமளிக்க மாட்டோம். ஒபாமாவாக இருக்கட்டும் கிளின்டன் நோனாவாக இருக்கட்டும் அங்கு போடும் விளையாட்டை ஆசியாவில் போட முடியாது.
அதனை நான் கூறியதாக அமெரிக்காவிடம் சொல்லுங்கள். ஆனால் இந்த விளையாட்டை மீண்டும் போட முயற்சித்தால் ஆசியாவில் அனைவரும் ஒற்றுமையாக எழுந்து முழு அராபி கரையும் இணைந்து எதிர்ப்போம்.
வௌ்ளைக்காரர்களே தங்களுக்கு சரியானதை செய்து கொள்ள வேண்டும். இல்லாவிடின் கப்பலில் ஏறி வெள்ளைக்காரர்கள் தங்களுக்கென நாடு தேட வேண்டிவரும்" என்றார் அமைச்சர் மேர்வின்.

1 கருத்துரைகள் :
muthalaikku thanneerinul palam athikam
Post a Comment