November 18, 2011.... AL-IHZAN Local News
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலை தொடர்பாக ஆராய்வதற்கென அமைச்சர் விஜயம் செய்திருந்தபோது ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட கூட்டத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்;..
எமது நாடு இன்னும் அபிவிருத்தி அடைந்துவரும் நிலையிலேயே உள்ளது. தனிநபர் வருமானம் 2300 தொடக்கம் 2400 டொலர்களாக இருக்கிறது. இதனால் முடியுமானவரை வெளிநாட்டு உதவி ஒத்தாசைகளைப் பெற்று அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.
எவ்வாறான சூழ்நிலையிலும் அரசாங்க பல்கலைக்கழகங்களை தனியாருக்கு வழங்கப்போவதில்லை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் சுதந்திரக் கல்வியை பணத்திற்கு விற்கப்போவதில்லை.
இதேவேளை உலகில் கம்யூனிசக் கொள்கையுடைய சீனா சமசமாஜ வாதியான வியட்õம், ரஷ்யா போன்ற நாடுகளில் தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்நிலையில் எமது நாட்டில் பல்கலைக்கழகங்களுக்கு 22 ஆயிரம் பேரை மாத்திரமே தெரிவு செய்கிறோம். எஞ்சிய இலட்சக் கணக்கானோர் நடுத்தெருவில் விடப்படுகின்றனர். இதில் பலர் பெருந்தொகைப் பணம் செலவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.
இந்த நிலைமையினைக் கருத்திற் கொண்டு கஷ்டப்பட்டேனும் வங்கிகளில் கடன் பெற்றேனும் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படாதவர்களுக்காக தனியார் பல்கலைக்கழகங்களை அமைத்து உயர்கல்வியை வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்திற்கு மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்புத் தெரிவிப்பதும் எமக்குத் தெரியும் என்றார்.
அபிவிருத்தி அடைந்துவரும் பட்டியலில் உள்ள எமது நாட்டில் 2016, 17 ஆம் ஆண்டுகளில் எமது பல்கலைக்கழகங்களில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தும் இலக்கு இருப்பதாக உயர்கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலை தொடர்பாக ஆராய்வதற்கென அமைச்சர் விஜயம் செய்திருந்தபோது ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட கூட்டத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்;..
எமது நாடு இன்னும் அபிவிருத்தி அடைந்துவரும் நிலையிலேயே உள்ளது. தனிநபர் வருமானம் 2300 தொடக்கம் 2400 டொலர்களாக இருக்கிறது. இதனால் முடியுமானவரை வெளிநாட்டு உதவி ஒத்தாசைகளைப் பெற்று அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.
எவ்வாறான சூழ்நிலையிலும் அரசாங்க பல்கலைக்கழகங்களை தனியாருக்கு வழங்கப்போவதில்லை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் சுதந்திரக் கல்வியை பணத்திற்கு விற்கப்போவதில்லை.
இதேவேளை உலகில் கம்யூனிசக் கொள்கையுடைய சீனா சமசமாஜ வாதியான வியட்õம், ரஷ்யா போன்ற நாடுகளில் தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்நிலையில் எமது நாட்டில் பல்கலைக்கழகங்களுக்கு 22 ஆயிரம் பேரை மாத்திரமே தெரிவு செய்கிறோம். எஞ்சிய இலட்சக் கணக்கானோர் நடுத்தெருவில் விடப்படுகின்றனர். இதில் பலர் பெருந்தொகைப் பணம் செலவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.
இந்த நிலைமையினைக் கருத்திற் கொண்டு கஷ்டப்பட்டேனும் வங்கிகளில் கடன் பெற்றேனும் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படாதவர்களுக்காக தனியார் பல்கலைக்கழகங்களை அமைத்து உயர்கல்வியை வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்திற்கு மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்புத் தெரிவிப்பதும் எமக்குத் தெரியும் என்றார்.
0 கருத்துரைகள் :
Post a Comment