animated gif how to

எதிர்ப்பாளர்கள் குவைத் பாராளுமன்றத்தில் நுழைந்து போராட்டம்

November 19, 2011 |

November 19, 2011.... AL-IHZAN World News

குவைத் பிரதமர் ஷேக் நாஸர் அல் முஹம்மது அல் ஸபாஹ் பதவி விலக கோரி நூற்றுக்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் பாராளுமன்றத்தில் நுழைந்தனர். ஏராளமானோர் பாராளுமன்றத்திற்கு வெளியே திரன்டனர்.


ஊழல் குற்றச்சாட்டை எழுப்பி எதிர்கட்சி எம்.பிக்கள் உள்ளிட்டவர்கள் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். இவர்கள் மீது போலீஸ் அடிதடி நடத்தியது. ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் கட்டிட வாசலை உடைத்து உள்ளே நுழைந்த மக்கள் முக்கிய சேம்பருக்கு நுழைந்து தேசிய கீதத்தை பாடிய பிறகு கலைந்து சென்றனர். இவ்வேளையில் எதிர்ப்பாளர்களை தடுக்காத பாதுகாவலர்கள், பிரதமரின் வீட்டை நோக்கி எதிர்ப்பாளர்கள் பேரணியாக புறப்பட்டவேளையில் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே உள்ள சதுக்கத்தில் அவர்கள் முழக்கமிட்டனர்...

அரபுலக எழுச்சி துவங்கிய வேளையில் அமைதியாக இருந்த குவைத்தில் பிரதமர் பதவி விலகவேன்டும் என்ற கோரிக்கை அண்மைக்காலமாக வலுவடைந்துள்ளது. 50 உறுப்பினர்களை கொன்ட பாராளுமன்றத்தில் 16 எம்.பிக்கள் சட்டவிரோதமாக வெளிநாட்டு பண பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இச்சம்பவத்தை கன்டித்து 20 எம்.பிக்கள் பாராளுமன்ற கூட்டத்தை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர். புதிய சம்பவங்களை குறித்து விவாதிக்க குவைத் எதிர்கட்சி எம்.பிக்கள் விரைவில் கூட்டம் நடத்த உள்ளனர்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!