November 21, 2011.... AL-IHZAN Local News
M.A.M Iflal
வடக்கை நோக்கியும், மேற்கில் நீண்டும் நல்லதொரு விடிவுக்காய் காத்திருக்கும் எமது பூர்வீக தளம் இன்று பல இன்னல்களுக்கும் பின்னடைவுக்கும் மாட்டி கொண்டு தத்தளிக்கின்றது. உறவுகளை தந்த அருமை புத்தளம் முறிவுகண்டு இருப்பதை எண்ணியே சில உணமைகளை வெளிக்காட்டி, நமது மக்களது புலமைக் கொண்டு, சமூகத்தை சூழ்ந்திருக்கும் மடமையை திறக்க எடுக்கும் ஒரு முயற்சி.
தேசிய அரசியலில் மூன்று தசாப்தங்களை நெருங்கும் எமது அநாதை அந்தஸ்தை பற்றியோ, இதே காலப்பகுதியில் நாம் இழந்து வரும் அரசாங்கத்தின் எத்தனையோ அபிவிருத்திகள் பற்றியோ எவ்வித கவலையையும் மனதில் ஏந்தாமல் புத்தளத்தின் ஒவ்வொரு நாளும் மறைந்து போகின்றன. தேர்தல் வாடை வீசும் போது மாத்திரம், புத்தளத்தின் அரசியலை கூத்துப் பார்க்கும், சமூக அரசியலில் பார்வையாளர்களாக மட்டும் இருந்து விட்டு, ஒதுங்கி போகும் பண்புடையோராக நாம் மாறிவிட்டோம்.
புத்தள சமூகத்தின் இன்றைய போக்கு எம்மை எத்தகைய பாரிய படுகுழிக்குள் தள்ளிச் செல்கிறது என்பதை நம்மில் எத்தனை பேர் சிந்திக்கிறோம்?
வளச் சுவீகரிப்பு எனும் திருட்டு இந்த நவீனக் காலத்திலும் எமது பிரதேசத்தில் அரங்கேறி வருகின்றமை பலருக்கு புதினமாய் போகின்றது. நம் கைகளை விட்டு எமக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள், மாணியங்கள், சந்தர்ப்பங்கள் என்பவை கொள்ளை அடிக்கப்படுவதை அதனை தட்டிகேட்க பலமற்றவர்களாய் நாம் இருக்கின்றோம். அரச தொழில் வழங்கல்களின் போது நம்மவர்குரிய வாய்ப்புகள் பறிக்கபடுகிறமை, கல்வித் துறையினது அபிவிருத்தி மந்தப்போக்கினை எட்டியுள்ளமை, உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தல்கள் தள்ளி போடப் படுகிறமை, நமது மக்களுக்கெதிரான அதிகார துஷ்பிரயோகங்கள் என பட்டியல் நீளும் பல வகையான பிரச்சினைகளுக்கு தீர்வு எதுவென அறிந்திருந்தும் இன்னும் நாம் காலம் தாழ்த்துகின்றோம்.
“இராமன் ஆண்டாள் என்ன இராவணன் ஆண்டாள் என்ன??” எனும் பழமொழிக்கேற்ப மக்களின் மனநிலை மாறிவிட்டமையால், பெரும்பான்மையான புத்தள முஸ்லிம் வாழ் மக்களிடையே அரசியல் ஆர்வம் அருகி வருகின்றமை இங்கே குறிப்பிட வேண்டிய உண்மையாகும். வாழ்க்கையின் அடிப்படையோடு தொடர்புடைய துறைகளில் அரசியல் துறை உருவெடுத்து வரும் தருணத்தில் எமது சமூகம் மட்டும் அரசியலை தள்ளி வைத்து பார்க்கும் பாரம்பரிய நிலையிலே நிலைத்துள்ளது. நம்மவர்களில் பலர் வாக்குரிமை எனும் விலைமதிப்பற்ற உரிமையை பயன்படுத்த தவறிப்போகின்றனர். அவ்வாறு பயன்படுத்தினாலும் இவர்களுடைய தெரிவும் சில வேளைகளில் பிழைத்து போய்விடுகின்றது.
முஸ்லிம் பெரும்பான்மையை கொண்டதாக புத்தள தேர்தல் தொகுதி காணப்படுகிறது.கடந்த நான்கு பொது தேர்தல்களிலும் எமது தேர்தல் தொகுதியினது வாக்களிப்போர் வீதம் குறைந்து வருகின்றது. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும், தம்மை வாக்காளர்களாக பதிந்து கொண்டவர்கள் கூட தேர்தல் தினத்தன்று வாக்குச்சாவடிகளுக்கு சென்று தமது வாகுகளை பாவியாது இருப்பதற்குரிய காரணங்களை அறிய தேவை எமக்கேற்பட்டது.
நமக்குரியதை பெற்றெடுப்பதற்காக பொருத்தமான நம்மவர் ஒருவரை நியமிக்க கிடைக்கும் சந்தர்ப்பங்களை எமது மக்கள் ஏன் தவிர்க்கின்றனர்??? சமூகத்தின் பல தரப்பினது மனோநிலை, செயற்பாடுகள், வாழ்க்கை முறைகளோடு ஒப்பிட்டு ஆய்வு செய்கையில் இதற்கான உண்மை காரணிகளை எம்மால் காண முடிந்தது. பிழையான கோட்பாடுகளையும் தலைமைத்துவ ஆற்றல்கள் ஏதுமில்லாத வெறுமனே பதவிக்காகவும், பணத்துக்காகவும், தமது கௌரவத்துக்காகவும் அரசியல் செய்ய முனையும் நபர்கள் விளைத்த விளைவுகள் நமது மக்களுக்கு கசப்பான அனுபவங்களை தந்துள்ளது. அத்தோடு வெளித்தன்மை அற்ற , சுயநல போக்குடைய , குறும் புத்தி குண்டர் கலாச்சார அரசியலால் வெறுப்படைந்த நமது மக்கள் மத்தியில் “அவனும் கள்ளன் இவனும் கள்ளன்” என்ற ஒருமித்த கருத்து இருந்து வருகிறது.
ஆனால், இதனால் மட்டுமே எமது சமூகம் அரசியலை சலிப்போடு பார்க்கின்றது என்றால் அது தவறானதாகும். அரசியலோடு நேரடியாக சம்பந்தபட்டவர்கள் மட்டுமல்லாது வேறு பலரின் முயற்சினாலும் சீரற்ற நடவடிக்கையினாலும், எமது மக்களின் பண்போடு ஒன்றாய் கலந்துவிட்ட பொடுபோக்கினாலும் தான் இன்று எமது சமூகம் ஆட்சியை தீர்மானிப்பதில் பங்கெடுக்காது போகின்றது! புதிய புத்தளத்தை காண வேண்டிய தேவை அதிகரித்து வரும் நிலையில், இந்த போக்கினை மாற்றியமைத்து, நாம் இழைக்கும் பிழைகளை மீட்டிப் பார்த்து அவற்றை சரி செய்துக் கொள்வது நமது கடமை அல்லவா???
நடைமுறை அரசியலை இஸ்லாமிய ஆட்சிமுறையாக மாற்றியமைக்க கனவு காணும், சமூகத்தின் அறிவுபடைத்தோர், இன்று இடம்பெறும் அரசியலின் வடிவத்தை புரிந்துக் கொள்ள முடியாது போகின்றனர். எமது உம்மத்தை இறைவழி நடத்தும் மார்க்க அறிஜர்கள், உலமாக்கள் போன்றவர்களை உள்ளடக்கிய தலைமை தூர நோக்கோடு கிலாபாஹ் நோக்கி பயணிக்கும் போது, பாதுகாக்கும் கேடயமாக இந்த தற்காலிகமான அரசியல் முறை பயன்பட முடியும். ஆனால் எமது சமூக தலைமைகளோ, குறைந்த பட்சம் அமுக்க குழுவாக இருந்து கொண்டு நமது இருப்பை பாதுகாக்கும் நடவடிக்கையை கூட செய்ய மறுக்கிறது. பாகிஸ்தானின் எதிர்கட்சி அரசியலே எமது அடுத்த பரிணாமம் என்று கற்பனை செய்து கொண்டு, மாற்று மதத்தவர்களின் நடைமுறை ஆட்சியில் இடம்பெறும் குறைகளை பிழைகளை மாற்றியமைக்க திட்டங்களை வகுத்துக் கொண்டு முட்டாள் தனமாய் காலத்தை கடத்தும் சமூக தலைமைகள் எப்போது எமது மக்களை சரியாக வழிநடத்தும்??
சமூகத்தின் முதுகெழும்புகள் என வர்ணிக்கப்படும் புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள், வியாபாரிகள், அனுபவமிக்க மூத்தோர்கள், துடிப்புடைய இளைஜர்கள் போன்றோரில் அதிகமானோர் அரசியலில் எந்த பக்கமும் சாராது நடுநிலை பேணுவோர் எனும் கோட்பாட்டை மனதில் ஏந்தியவர்களாக இருக்கின்றனர். இவ்வாறனவர்கள் புத்தள அபிவிருத்துக்கு பங்கம் விளைவிப்பதில் தாமும் பங்குதாரர்கள் என்பதை அறியாத அப்பாவிகளாக போய்விட்டனர். சமூகத்தை விழிப்பூட்டி சரியாக வழி நடத்தும் திறனை, வல்ல இறைவன் இவர்களுக்கு வழங்கியும் அரசியல் சார்ந்த விடயங்களில் மாத்திரம் இவர்கள் தூரம் போகின்றனர். அரசியலை ஹராமாக பார்க்கின்றவர்களாகவும், அரசியலோடு தொடர்புடைய மற்றும் அரசியல் பதவி வகிப்போரையும் மதியாத தன்மையும், அத்தோடு இவர்களை பிழையானவர்களாக சமூகத்துக்கு எடுத்துக் காட்டுகின்ற செயற்பாடுகளை நடுநிலை பேணுவோர் செய்ய மறப்பதில்லை.
சமூகத்தின் நன்மைக்காக சமூகம் ஆற்ற வேண்டியவை …
புத்தள வாழ் முஸ்லிம் மக்களிடையே அரசியல் விழிப்புனர்வுகள் மேற்கொள்ளப்பட்ட்டு , தொடர்ந்து எமது சமூகம் அடைந்து வரும் தோல்விகள் தடுக்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் உதவிகளின் நன்மைகளை , அரச கருமங்களின் பிரதான் செயற்பாடுகளை சாதாரண மக்களும் அறிந்திருக்க வேண்டும். மற்ற சமூகங்கள் அடைந்து கொள்ளும் வசதி வாய்ப்புகள் பற்றிய ஆர்வத்தை நம்மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். பள்ளித் தலைமைகள், ஜமாத்துக்கள், அரச-சார், அரச-சார்பற்ற நிறுவனங்கள்,
அரசியல் கட்சிகள், சமூகத் தொண்டர்களை உள்ளடக்கிய அணியினர் முன்வந்து அரசியலின் முக்கியத்துவத்தை நம் சமூகத்துக்கு கொண்டு சென்று நம் சமூகத்தை விழிப்பூட்டி எழுச்சி பெற செய்ய வேண்டும் வேண்டும்.
ஜும்மாக்கள், மகல்லாஹ் சந்திப்புகள், பொது கூட்டங்கள் போன்ற சந்தர்பங்களிலும், நோட்டீஸ் , பதாதைகள் , வெளியீடுகள், வலைத்தள செய்தி ஊடகங்கள், சமூக வலைப்பின்னல்கள் என்ற நூதன ஊடகங்களை பயன்படுத்தியும் நமது மக்களை அரசியல் ரீதியாக அறிவூட்டி, நம்மை நாமே பலப்படுத்த வேண்டும். அது மட்டுமன்றி சுயநல போக்குடைய அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் எமது சமூகத்திற்கு எவ்வாறு இடையூறாக இருக்கும் என்பதும் மக்களுக்கு அறியபடுத்த வேண்டும். அரசியல் மந்திர தந்திரங்களை பிரித்தறிந்து நமது மக்களை சரியாக அறிவூட்டும் முயற்சிகளை எமது தலைமைகள் முன்னெடுக்க வேண்டும்.
அரசியலை வாழ்கையாக கொண்டோரை இன்னும் எதிர்த்து செயற்படாது, சமூகத்துக்கு தேவையான தலைமைத்துவத்தை வழங்குவோரின் பிழைகளை அருகில் இருந்து சுட்டிக்காட்டி பலமிக்க அரசியல் தலைமைகளாக, நமது சமூகத்துக்கென உருவாக்க வேண்டியது நடுநிலை பேணும் சகோதரர்களின் கடமையாகின்றது என்றே நாம் எண்ணுகின்றோம். அமானிதம் பேணாது , அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, மக்களுக்கு துன்பம் இழைத்து, கொடுங்கோல் ஆட்சி நடத்தாமல்; “இறைவனின் ஏற்பை பெறுவதற்காக அரசியல்” என்ற அடிப்படை கொள்கையை விட்டு, ஆட்சியாளர்கள் விலகிச் செல்லாத வண்ணம் அவர்களை உலமாக்கள் தொடர்ந்து வழி நடத்த வேண்டும்.
கற்றதைக் கொண்டு கல்லாதோரை கற்பித்தலானது சுன்னத்தான விடயமாக இருக்கிறது. ஆகவே அறிவுப் படைத்தோர், நம் சமூகத்துக்காக அரசியலில் ஆர்வம் கொண்டோரை நாளைய சிறந்த தலைவர்களாக உருவாக்கும் பணியில் ஈடுபடவேண்டும். செல்வத்தை சம்பாதிக்கும் திறன்மிக்கோர் சமூக நன்மைக்காக அறிவு, சாதுர்யம், குணம், தியாகம், தைரியம் கொண்டவர்கக்கு அரசியலில் ஈடுபட சந்தர்ப்பங்களை வழங்கிட வேண்டும். துறைசார் நிபுணர்கள், இளைஜர்கள் பக்க பலமாக இருந்து புத்தளத்து அபிவிருத்தி கனவுகளை வென்றெடுப்பதில் தோல் கொடுத்திட வேண்டும். உலமாக்கள், சமூக தலைமைகள், அனுபவமிக்க மூத்தவர்கள் நமது அரசியல் தலைமைகளுக்கு ஆலோசனை வழங்குவதிலும் நேர் வழி ஆட்சி நடத்துவதிலும் பின்னின்று பலம் சேர்க்க வேண்டும்.
அல்லாஹ்வின் அருளால் அரசியல் விழிப்புணர்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று சிறந்த சமூக மாற்றம் உயர் மட்டங்களிலிருந்து பாமர மக்கள் வரை ஏற்பட வேண்டும். அரசியலில் ஆர்வம் பெருகி ஆட்சியை தீர்மானிப்பதில் நமது மக்கள் அரசியல் அறிவு பலமிக்க கொண்டவர்களாக உருவெடுக்க வேண்டும். அதுவே புத்தள பிரதேச வாழ் முஸ்லிம் மக்களுக்கு பலமான அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்கிட வேண்டும். இடம்பெயர்ந்த வடபுல மக்களும், தம்மை புத்தளத்தான்களாக சட்டப்படி பதிந்து, எமது பிரதேசத்தின் பலத்தை உறுதிப்படுத்தும் செயற்பாடும், எமது புத்தளம் இராட்சத அபிவிருத்திகளுக்குள் உள்வாங்கப்பட்டு, நம் மக்கள் அடைந்து வந்த ஏமாற்றங்கள் காணாமல் போக வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு எதிரிகளால் தீண்டப்படாது எமது அரசியல் பலத்தின் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும். இளைஞர்கள் கனவுகள் நனவாக வேண்டும், எமது நீண்ட கால பயணம் தொடர வேண்டும்.
M.A.M Iflal
Undergraduate Student
(B.A in Event Management)
Limkokwing University Creative Technology
Malaysia.
News: Lankamuslim

புத்தளம், புத்தளம் தேர்தல் தொகுதி | |||||
ஆண்டு | வாக்களர்கள் | வாக்களித் தவர்கள் | வாக்களிக் காதவர்கள் | ||
2000 | 82,077 | 57,483- 70.04% | 24,594 | ||
2001 | 84,866 | 57,471- 67.72% | 27,395 | ||
2004 | 90,004 | 59,934- 66.59% | 30,070 | ||
2010 | 102,643 | 54,899- 53.49% | 47,744 |
Retreived from: www.lankamuslim.org

0 கருத்துரைகள் :
Post a Comment