animated gif how to

பட்ஜெட் 2012 – ஜனாதிபதி அறிவித்த சில சலுகைகள்

November 22, 2011 |

November 21, 2011.... AL-IHZAN Local News

அரச காணிகள் தனியாருக்கு விற்கப்படவில்லை எனவும் அவை 99 வருடங்கள் தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி வரவு – செலவு திட்ட உரையில் பாராளுமன்றில் தெரிவித்தார். தனியார் நிறுவன பறிமுதல் சட்டத்தின் ஊடாக தனியார் சொத்துக்கள் பறிக்கப்படவில்லை எனவும் அரசிடம் முன்னர் இருந்த நிறுவனங்களே மீளப்பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


நாட்டில் வளர்ந்துவரும் சுகாதார சேவையை மேம்படுத்த 2012 வரவு செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்தார்.
அரச ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கும் 2012ம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக நூற்றுக்கு 10 சதவீதம் சம்பள உயர்வு வழங்க தான் பரிந்துரைப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்  பாராளுமன்றில் குறிப்பிட்டார்.

பரீட்சையில் சித்தியடையாவிட்டால் வாழ்க்கையிலும் சித்திபெற முடியாது என கருத வேண்டாம். சாதாரண தர உயர்தர பரீட்சையில் சித்திபெற்று பல்கலைக்கழகம் செல்ல முடியாத மாணவர்கள் தொழிற்பயிற்சி கல்லூரிகளில் அடுத்த வருடம் முதல் இணைத்துக் கொள்ளப்படுவர் என ஜனாதிபதி பாராளுமன்றில் தெரிவித்தார்.


விளையாட்டு துறையை மேம்படுத்தும் நோக்கில் யாழ். துறையப்பா, கிளிநொச்சி விளையாட்டு மைதானம் உள்ளிட்டவற்றை அடுத்த வருடத்தில் அபிவிருத்தி செய்ய 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.


48 மணித்தியாலங்களுக்கு மாத்திரம் இலங்கைக்கு விஜயம் செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணம் அறவிடப்பட மாட்டாதென ஜனாதிபதி  பாராளுமன்றில் அறிவித்துள்ளார்.
புதிய வாகனக் கொள்வனவு பதிவு வரி நீக்கப்பட்டுள்ளதாகவும் சொகுசு வாகனங்கள் இறக்குமதிக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் லொறி மற்றும் பஸ்களுக்கான பதிவு வரி அமுலில் இருக்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


ஊடகவியலாளர் மற்றும் கலைஞர்களுக்கு மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்து கொள்ளவென விசேட நிதியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கென 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் 25 வருடத்திற்கு மேல் ஊடக மற்றும் கலை சேவையில் உள்ளவர்களுக்கு மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்ய 11 லட்சம் ரூபா கடன் அடிப்படையில் வழங்கப்படும் என ஜனாதிபதி வரவு – செலவு திட்ட உரையில் குறிப்பிட்டார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!