animated gif how to

கத்தார்: யுனெஸ்கோ'வின் கல்வித் திட்டங்களுக்கு நிதியுதவியை அதிகரிக்கப் போவதாக அறிவித்துள்ளது!

November 15, 2011 |

November 15, 2011.... AL-IHZAN World News

கத்தார் நாடு, "யுனெஸ்கோ'வின் கல்வித் திட்டங்களுக்கான நிதியுதவியை அதிகரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.பாலஸ்தீனத்திற்கு முழு உறுப்பினர் அந்தஸ்தை, "யுனெஸ்கோ' சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து, அமெரிக்காவும், இஸ்ரேலும் தங்களது நிதியுதவியை நிறுத்தப் போவதாக அறிவித்தன. 


இதனால், "யுனெஸ்கோ'வின் கல்வித் திட்டங்களுக்கான பட்ஜெட்டில், 6.5 கோடி டாலர் துண்டு விழுந்தது.இக்கல்வித் திட்டங்கள், ஐ.நா.,வின் புத்தாயிரம் மேம்பாட்டு இலக்குத் திட்டத்தின் கீழ் செயல்படுபவை. இந்நிலையில், "யுனெஸ்கோ'வின் நிதிப் பற்றாக்குறையைத் தீர்க்க, கத்தார் முன்வந்துள்ளது...

கத்தார் மன்னரின் மனைவி மூசா பின் நசீர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதியுதவி நிறுத்தப்பட்டது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். புத்தாயிரம் இலக்கு 2015ல் நிறைவேற்றப்பட வேண்டிய நிலையில், தனது குறிக்கோளுக்கு அனைத்து உறுப்பினர் நாடுகளும் ஆதரவு தரும்படியும் அவர் கோரியுள்ளார். புத்தாயிரம் இலக்கின் தொடக்கக் கல்விப் பிரிவின் சிறப்பு ஆலோசகராக மூசா பின் நசீர் உள்ளார். 

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!