animated gif how to

இலங்கையில் தெற்கு அதிவேக பாதை பயணிக்க 400 ரூ கட்டணம்

November 15, 2011 |


November 15, 2011.... AL-IHZAN Local News

நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ள தெற்கு அதிவேக மார்க்கத்தின் கொட்டாவை முதல் காலி வரையான வீதி எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த வீதியினூடாக பயணிப்பதற்கு ஆகக் குறைந்த கட்டணமாக 400 ரூபாவை செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. 


இந்த வீதியினூடாக மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க முடியுமெனவும்,  4 வழிகளை உள்ளடக்கிய இந்த வீதியில் காலி நகருக்கு செல்வதற்கு ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களுமே செல்லுமெனவும் குறிப்பிடப்படுகிறது.

தெற்கு அதிவேக மார்க்கத்திற்குள் பிரவேசிப்பதற்கும் வெளியேறுவதற்கும் எட்டு இடங்கள் காணப்படுவதுடன் அவை கொட்டாவை, கஹதுடுவ, களனிகம, வெலிபன்ன, குறுந்துஹா, தாபம, தொடங்கொடை,  பத்தேகம மற்றும் பின்னதுவ ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.


எதிர்வரும் 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் எவருக்கும் அதிவேக வீதியை பார்வையிட முடியுமெனவும், எவ்வாறாயினும் இந்த வீதி திறக்கப்பட்டதன் பின்னர் அங்கு பிரவேசிப்பது தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வீதியின் போக்குவரத்து கடமைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 500 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!