animated gif how to

புஷ்ஷை கைது செய்ய கனடாவிடம் கோரிக்கை

October 15, 2011 |

October 15, 2011.... AL-IHZAN World News

அமெரிக்கா தலைமையிலான பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் சித்திரவதைக்கு அதிகாரமளித்த குற்றச்சாட்டில் அமெரிக்கா முன்னள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷை கைது செய்து விசாரிக்குமாறு கனேடிய அதிகாரிகளுக்கு சர்வதேச மன்னிப்புச் சபை அழைப்பு விடுத்துள்ளது.


கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சுரே நகரில் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள பொருளாதார உச்சி மாநாட்டுக்கு புஷ் சமூகமளிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.


மனித உரிமை மீறல்களுக்கான புஷ்ஷின் சட்டப்பொறுப்பு குறித்த ஆவணமொன்றை கடந்த மாதம் கனேடி அதிகாரிகளுக்கு சர்வதேச மன்னிப்புச் சபையினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. புஷ்ஷை நீதியின் முன்கொண்டு வருவதற்கு அமெரிக்க அதிகாரிகள் தவறியுள்ள நிலையில் சர்வதேச சமூகம் அவருக்கெதிராக நடவடிக்கை எடுப்பது அவசியமெனவும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது...
பல ஆயிரம் முஸ்லிம்களை சட்டவிரோதமாக பிடித்து அவர்களை மனிதாபிமானத்திற்கு எதிராக சித்திரவதை மேற்கொண்ட சம்வத்தில் புஷ்ஷே பிரதானம் பங்கு வகித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!