October 15, 2011.... AL-IHZAN Local News
கொழும்பு மற்றும் ஐந்து மாநகரசபைகளை உள்ளடக்கிய நகர அபிவிருத்தி அதிகார சபையை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். பத்திரிகை ஆசிரியர்களுடனான நேற்றைய சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை ஐ.தே.க.தலைவர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு மாநகர சபையை ஓர் அதிகார சபையாக மாற்றும் திட்டத்தை ஐ.தே.க. வெற்றிகரமாக தடுத்து நிறுத்தும் என தெரிவித்திருந்தார்.
ஆனால் அதிகார சபையை ஏற்படுத்துவதற்கான திட்டத்தை முன்னெடுக்கப்போவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். கொழும்பு மாவட்டத்திலுள்ள மூன்று மாநகரசபைகள் உட்பட ஐந்து உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பதற்கான அதிகார சபையை ஏற்படுத்தும் சட்டமூலம் இந்த மாதம் இறுதிக்கு முன்னார் நிறைவேற்றப்பட்டு அமுல்படுத்தப்படுமென்று அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றது.

0 கருத்துரைகள் :
Post a Comment