October 24, 2011.... AL-IHZAN Local News
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாளை அமெரிக்கா செல்கிறது. உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்கா செல்லும் இவர்கள் அந்நாட்டு ஆளும் தரப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் நாளை அமெரிக்கா செல்கின்றனர்.
இலங்கை அரசாங்கத்துடன் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகள், இனப்பிரச்சினைத் தீர்வு, மீள்குடியேற்றம், புனரமைப்புப் பணிகள், வடக்கு, கிழக்குப் பகுதிகளில் எதிர்நோக்கப்படும் காணிப்பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இக்குழுவினர் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுகின்றது.

0 கருத்துரைகள் :
Post a Comment