animated gif how to

துருக்கியில் நில அதிர்வு: பலியானோர் எண்ணிக்கை 1000த்தைத் தாண்டியது

October 24, 2011 |

October 23, 2011.... AL-IHZAN World News

துருக்கியின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என அந்நாட்டு புவியியல் துறை தலைவர் கூறியுள்ளார். துருக்கியின் கிழக்கு பகுதியில் உள்ள வான் என்ற மிகப்பெரிய நகரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.3 ஆக பதிவானது. இதில் பல கட்டடங்கள் சேதமடைந்தன. நிலநடுக்கத்தில் காயமடைந்தர்களில் பலர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. மக்கள் பீதியில் தெருக்களில் குவிந்தனர். எரிக்ஸ் மாவட்ட மேயர் ஜூல்பிகர் அரபோகு கூறுகையில், "நிறைய கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன; பலர் பலியாகியுள்ளனர். எனினும், எத்தனை பேர் என்பது தெரியவில்லை. அவசர மீட்புப் பணிகளுக்காகக் காத்திருக்கிறோம்' என்றார்...


நிலநடுக்கத்தினால் மக்கள் மத்தியல் பீதி ஏற்பட்டுள்ளது. தொலைதொடர்பு சாதனங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் சம்பவ இடங்களை அடைய முடியவில்லை என வான் நகர மேயர் பெகிர் காயா கூறியுள்ளார். 


இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான பல மாடி கட்டடங்கள், ஓட்டல்கள் சேதமடைந்துள்ளது. கட்டட இடிபாடுகளிலிருந்து ஏராளமானவர்களின் குரல்கள் கேட்பதாக வான் நகர அரசு செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறினார். 


வான் நகரில் மீட்புப் படையினர், இடிபாடுகளுக்கிடையில் சிக்கியுள்ள நபர்களையும், பலியானவர்களின் உடல்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


நிலநடுக்கத்திற்கு பிந்தைய நில அதிர்வுகள் இரண்டு கிராமங்களில் ஏற்பட்டதாக புவியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. துருக்கியின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அருகில் உள்ள மாகாணங்களிலும் உணரப்பட்டதாக மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பூகம்பத்தை தொடர்ந்து துருக்கி பிரதமர் தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு பூகம்பம் குறித்து ஆய்வு செய்தார். 


இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான உயிரிழப்பும் பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடம் மீட்டு குழு கூறியுள்ளது. நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுததிகளுக்கு மீட்பு பணியில் ஈடுபட ராணுவம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 


இதனிடையே புவியியல் நிறுனத்தின் தலைவரான பேராசிரியர் முஸ்தபா இர்டிக், இஸ்தான்புல் நகரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கூறுகையில், துருக்கியில் ஏற்பட்ட கடுமையானநில நடுக்கதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.இதனிடையே பயங்கர பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!