October 28, 2011.... AL-IHZAN Local News
கல்முனை மாநகரசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று காலை கொழும்பிலுள்ள நீதியமைச்சில் இடம்பெற்றது.
நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவருமான ரவுப் ஹக்கீம் முன்னிலையில் இடம்பெற்ற சத்தியப்பிரமாண நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை மாநகர மேயர் சிராஸ்
மீராசாஹிப், பிரதிமேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மற்றும் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
படங்கள்: தமிழ்மிரர்
0 கருத்துரைகள் :
Post a Comment