September 06, 2011.... AL-IHZAN Local News
(எஸ். அஸ்ரப்கான் - கல்முனை)
கல்முனை மாநகரசபையின் ஆட்சியினை மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றி மேயராக தெரிவு செய்யப்படும் போது மனித நேயமுள்ள ஆட்சியனை ஏற்படுத்த என்னாலான சகல முயற்சியினையும் மேற்கொள்வேன்.இவ்வாறு கல்முனை மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் கல்முனை பிரதேச ஊடகவியாளர்களின் முன் தனது கருத்தினை தெரிவிக்கையில்,

கல்முனை மாநகரசபை எல்லைக்குள் தமிழ் முஸ்லிம் மக்கள் மிகவும் ஒற்றுமையாகவும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடனும் வாழ்ந்து வருகின்றனர். எதிர்காலத்தில் கல்முனை மாநகரசபையில் எதிர்கட்சி ஒன்றில்லாமல் தமிழ் பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்து மனித நேயமுள்ள ஆடசியொன்றினை முன்னெடுத்து செல்ல திடசங்கர்ப்பம் புண்டுள்ளேன்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் என்னை கல்முனை மாநகரசபையின் மேயராக சிபார்சு பண்ணுவதனை விட மக்கள் வழங்கும் தீர்பிற்கே நான் முக்கியத்துவம் வழங்கவுள்ளேன்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் என்னை கல்முனை மாநகரசபையின் மேயராக சிபார்சு பண்ணுவதனை விட மக்கள் வழங்கும் தீர்பிற்கே நான் முக்கியத்துவம் வழங்கவுள்ளேன்.
தேர்தலில் வெற்றி பெற்றாலோ தோல்வியடைந்தாலோ மக்களுக்கு வழங்கும் எந்த சேவையிலிருந்தும் சற்றும் தளராமல் செயற்படுவதுடன் பழிவாங்கும் எண்ணம் ஒரு துளியளவும் கூட என்னிடம் இல்லை.
கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெற்றிக்கு பின்னால் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதொரு அம்சமாக திகழ்ந்துள்ளது. அந்த வகையில் சகல ஊடகவியலாளர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
உயிருட்டமுள்ள ஒரு கட்சியில் ஒருவனாக இருந்து கொண்டு சுய இலாபம் தேடுவதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை. கல்முனை பிரதேச மக்களுக்கு என்னாலான சகல உதவிகளையும் வழங்கி இந்த நாட்டில் எந்தவொரு உள்ளுராட்சி மன்றங்களிலும் இல்லாத சகல இன மற்றும் சகல கட்சி உறுப்பினர்களையும் ஒன்றிணைந்த ஒரு புதிய திருப்பத்துடனான மனித நேய ஆட்சி மூலம் எந்தவொரு பிரதேசத்தையும் இனத்தையும் பாதிக்காவண்ணம் சகலரையும் சேவை சென்றடையும் வகையில் சேவை பகிர்வு வழங்கப்படும். பொதுமக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிகள் ஒரேயடியாக செலுத்தப்படுவதற்கான அழுத்தங்களில் தளர்வுகளை ஏற்படுத்தி மக்களுக்கு சார்பாக அவர்களின் வசதிக்கேற்ப நிலுவைகளை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படுவதுடன் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளும் புரணப்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
0 கருத்துரைகள் :
Post a Comment