September 22, 2011.... AL-IHZAN Local News
அமைச்சர் மேர்வின் சில்வாவின் சில செயல்பாடுகளினால் முஸ்லிம்கள் மத்தில் அச்சம் மற்றும் விசன நிலை ஏற்படிருந்தது இது தொடர்பாக பல முஸ்லிம் அரசியல் வாதிகள் கருத்துரைதிருந்தனர். இந்த நிலையில் இன்று கொழும்பு தெவடகஹ பள்ளிவாசலுக்கு சென்றுள்ள அமைச்சர் திருட்டுத் தனமாக மாடுகளை அறுப்பவர்களையே தான் எச்சரித்தேன். மாற்றமாக முஸ்லிம்கள் மாடு அறுப்பதையோ குர்பான் கொடுப்பதனையே தான் ஒருபோதும் எதிர்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் இஸ்லாமிய முறைப்படியே மாடுகளை அறுக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் போது மஸ்ஜிதுக்கு நன்கொடை ஒன்றையும் வழங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுகின்றது தெவடகஹ மஸ்ஜிதுக்கு அவர் இன்று சென்றிருந்த போது அமைச்சர் மேர்வினுடன் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா, கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி ஆகியோரும் சென்றிருந்துள்ளனர்.படங்கள்
கடந்த வருடம் மேர்வின் சில்வா பிரதி அமைச்சராக இருந்தபோது கடந்த வருடம் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி வத்தளை ஹுனுபிடிய அக்பர் நகர் பிரதேசத்தில் அமைத்திருக்கும் ஜும்மாஹ் மஸ்ஜித் ஒன்றினுள் கிரிபத் கொட போலீஸ் OIC உடன் நுலைந்து அங்கு உழ்ஹியா கொடுப்பதற்கு கொண்டுவரப்பட்ட 30 வரையான மாடுகளை பலவந்தமாக லாரி ஒன்றினுள் ஏற்றி எடுத்து சென்றமை குறிபிடத்தக்கது.
படங்கள்: TamilMirror
0 கருத்துரைகள் :
Post a Comment