September 07, 2011.... AL-IHZAN Local News
தனி அலகின் தலைநகர் கல்முனையே. சவால்களுக்கு மத்தியிலும் முஸ்லிம் காங்கிரஸ் அதனை வென்றெடுக்கும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பொது செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் முக்கியமான உள்ளூராட்சி மன்றமாக கல்முனை விளங்குகின்றது . பூகோள ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இச் சபை முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் மிக்கது. எனவே கல்முனை மக்கள் இத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பக்கம் அணி திரள வேண்டும். தெளிவான ஆணையை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்...
கல்முனை மாநகரை வென்றெடுக்க முடியுமென்ற நம்பிக்கை எமக்குள்ளது . இச்சபையை மீண்டும் காங்கிரஸுக்கே பெற்றுகொடுக்க வேண்டும் என்ற சரியான நிலைப்பாட்டில் மக்கள் உள்ளனர். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
1 கருத்துரைகள் :
தேர்தல் வந்தால் போதுமே வாயுளறுவதற்கு,சும்மாபோட்டு மக்களைகுளப்பாதிங்க
Post a Comment