September 03, 2011.... AL-IHZAN World News
அங்காரா:இஸ்ரேல் தூதரை துருக்கி வெளியேற்றியது. அத்தோடு வரும் வெள்ளிக்கிழமை அது இஸ்ரேலுடன் இராணுவத் தொடர்புகளைத் துண்டிக்கிறது என்று துருக்கி கூறியுள்ளது.
கடந்த வருடம் துருக்கியிலிருந்து காஸாவுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஃப்ளோடில்லா கப்பலை இஸ்ரேலிய கப்பற்படை அத்துமீறி துப்பாக்கியால் சுட்டு 9 பேரைக் கொன்றது.
இந்தச் சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வமாக வரும் வெள்ளிக்கிழமை ஐ.நா. அறிக்கை வெளியிடவுள்ளது. ஆனால் நியூயார்க் டைம்ஸ் ஆங்கில நாளிதழ் அந்த ஐ.நா. அறிக்கையின் சாராம்சத்தை இப்பொழுது வெளியிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து துருக்கி இந்த முடிவை எடுத்துள்ளது...
இஸ்ரேலின் அத்துமீறலை “அது அந்நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைக்காக எடுக்கப்பட்டது” என்று வக்காலத்து வாங்கும் அந்த அறிக்கை, ஃப்ளோடில்லா கப்பல் மீது இஸ்ரேலியப் படையினர் தாக்கி 9 துருக்கிய தன்னார்வத் தொண்டர்களை அநியாயமாகச் சுட்டுக்கொன்றதை ‘அத்துமீறல்’ என்றும், ‘நியாயமற்றது’ என்றும் குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேலின் நடவடிக்கை சர்வதேசச் சட்ட விதிமுறைகளுக்குட்பட்டே உள்ளது என்று ஐ.நா. அறிக்கை கூறுவதாக ஓர் இஸ்ரேலிய அதிகாரி கூறினார்.
0 கருத்துரைகள் :
Post a Comment