September 05, 2011.... AL-IHZAN Local News
கல்முனை உட்பட நாட்டின் பலபகுதிகளையும் சேர்நத நண்பர்கள் தமது பாடசாலை கால நினைவுகளை மீட்டுக் கொண்டதுடன் சிறுவர்களுக்கான வினோத விளையாட்டுக்களும் இடம்பெற்றன.
நோன்பு பெருநாளை முன்னிட்டு கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் 1990 ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரணதர வகுப்பில் கல்விபயின்று எமது நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல உயர்பதவிகளை வகிக்கும் வகுப்பு நண்பர்கள் ஒன்றிணைந்து ” ஷஹிரியன் 90 ” என்ற பெயரில்
குடும்ப ஒன்றுகூடல் ஒன்றினை கடந்த சனிக்கிழமை ஒழுங்கு செய்திருந்தனர்.கல்முனை உட்பட நாட்டின் பலபகுதிகளையும் சேர்நத நண்பர்கள் தமது பாடசாலை கால நினைவுகளை மீட்டுக் கொண்டதுடன் சிறுவர்களுக்கான வினோத விளையாட்டுக்களும் இடம்பெற்றன.
அமைப்பின் தலைவர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தவிசாளர் செரீப் ஹக்கீம் இ இணைப்பாளர் எம்.எம்.ஜெஸ்மின் ஆகியோர் உரையாற்றினார்கள்.(படங்கள் இணைப்பு)
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி வரலாற்றில் இவ்வாறான குடும்ப ஒன்றுகூடலொன்று இடம்பெற்றது இதுவே முதற்தடவையாகும்.
நிகழ்வின் இறுதியில் சிறுவர்களுக்கு நோன்பு பெருநாள் பரிசில்களும் வழங்கப்பட்டன.
0 கருத்துரைகள் :
Post a Comment