animated gif how to

சகோதரி ரிசானாவை விடுவிக்க புதிய தந்திரோபாயம் - ஹக்கீம் நடவடிக்கை

August 18, 2011 |

August 18, 2011.... AL-IHZAN Local News

குறைந்த வயதில் ரிசானா நபீக்கை வெளிநாட்டுக்கு அனுப்பியது தொடர்பாக கைதான இரு முகவர்களுக்கும் எதிரான வழக்கு விசாரணையை துரிதப்படுத்த நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் நடவடிக்கை எடுத்துள்ளார்.


இது தொடர்பான வழக்கு ஆவணங்களை சவூதி அரேபிய நீதி அமைச்சருக்கு அனுப்பி அதனூடாக ரிசானாவின் விடுதலையை துரிதப்படுத்த உள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்தது.


போலி ஆவணங்களைத் தயாரித்து 17 வயதான ரிசானா நபீக்கை சவூதி அரேபியாவுக்கு அனுப்பிய முகவர்கள் இருவர் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் போலி ஆவணங்களைத் தயாரித்த மற்றொரு நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக சி.ஐ.டி.யினர் தெரிவித்தனர்...
இந்த நிலையில் இவர்கள் தொடர்பான வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தி அது தொடர்பான சான்றுகளை பெறவும் அவற்றை சவூதி அரேபிய நீதி அமைச்சருக்கு வழங்கவும் உள்ளதாக அமைச்சு கூறியது. இது தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.


ஜெனீவா சாசனத்தின் பிரகாரம் 18 வயதுக்குக் குறைவான ஒருவரை தண்டிக்க முடியாது. ரிசானா பணிப்பெண்ணாக பணிபுரிந்த போது அவர் பராமரித்த குழந்தை மரணித்தது. அப்போது அவருக்கு வயது 17 ஆகும். எனவே இந்த அடிப்படையில் ரிசானாவுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுக்க திட்டமிட்டுள்ளதாக நீதி அமைச்சு கூறியது.

Flag Counter

Free counters!