animated gif how to

இரத்தக்களறியாகும் சிரியா: அரபுநாடுகள் கடும் எதிர்ப்பு

August 09, 2011 |

August 09, 2011.... AL-IHZAN World News

டமாஸ்கஸ்:அரசுக்கெதிரான மக்கள் எழுச்சிப் போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதற்காக பஸ்ஸாருல் ஆஸாதின் வெறிப்பிடித்த அரசு நடத்திவரும் படுகொலைகளுக்கு எதிராக அரபு நாடுகளும் வெளிப்படையாக எதிர்ப்பை தெரிவித்துள்ளன.


ஒருவார காலமாக ஹமாவிலும் வடகிழக்கு நகரமான டையர் எஸ்ஸோரிலும் தொடரும் கூட்டுப்படுகொலைகளுக்கு சவூதி அரேபியா உள்ளிட்ட அரபுநாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. சிரியாவிலிருந்து தங்களது தூதரை திரும்ப அழைக்க சவூதிஅரேபியா தீர்மானித்துள்ளது...

சவூதிஅரேபியா, குவைத், ஜோர்டான் ஆகிய நாடுகள் பஸ்ஸாரின் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக பகிரங்கமாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. பஹ்ரைன், கத்தர், குவைத், சவூதிஅரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஒமான் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான கல்ஃப்-கோ-ஆப்பரேசன் கவுன்சிலும் சிரியா அரசின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை கண்டித்துள்ளது.


ஞாயிற்றுக்கிழமை அரபு லீக்கின் தலைவர் நபீல் அல் அரபியும் சிரியா ராணுவம் தாக்குதலை நிறுத்த கோரிக்கை விடுத்துள்ளார். சிரியாவில் மக்கள் எதிர்ப்பு போராட்டம் துவங்கியதிலிருந்து இத்தனை அரபு நாடுகள் எதிர்ப்பை தெரிவிப்பது இதுதான் முதல் தடவையாகும். கடந்த ஒருவாரத்திற்கிடையே 300க்கும் அதிகமான சிவிலியன்கள் சிரியா அரசின் ராணுவ காட்டுமிராண்டித்தனத்தால் கொலைச் செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன் தினம் சிரியாவில் 80க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.


ராணுவ நடவடிக்கைகள் கொடூரமாக நிகழும் டையர் எஸ்ஸோரில் மட்டும் ஐம்பதிற்கும் மேற்பட்ட சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


சிரியாவின் நடவடிக்கைகளை கடுமையாக கண்டித்த சவூதி மன்னர் அப்துல்லாஹ், தங்களது நாட்டு தூதரை திரும்ப அழைப்பதாக அறிவித்தார். “சிரியாவில் நடக்கும் சம்பவங்களை ஒருபோதும் சவூதி அரேபியா ஏற்றுக்கொள்ளாது. நியாயப்படுத்த முடியாத சம்பவங்கள் அங்கு நடைபெறுகிறது. நாட்டில் பஸ்ஸார் வாக்குறுதி அளித்த அரசியல் சட்ட சீர்திருத்தங்களை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். சிரியாவின் எதிர்காலம் இரண்டு காரியங்களுக்கு இடையே உள்ளது. ஒன்று அறிவுப்பூர்வமாக அரசியல் சட்ட சீர்திருத்தத்திற்கு தயாராகவேண்டும். அல்லது கடுமையான கலவரத்தின் மூலம் அனைத்தையும் துடைத்தெறிய வேண்டும். இறைவன் காப்பாற்றட்டும்” என மன்னர் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.


சிரியாவின் நிலைமைகளை குறித்து விவாதிக்க குவைத் தனது தூதரை திரும்ப அழைக்க தீர்மானித்துள்ளது. சிரியாவில் ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் முஹம்மது அல் ஸபாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.


ஜோர்டான் வெளியுறவுத்துறை அமைச்சர் நாஸர் சிரியாவின் ராணுவ நடவடிக்கையை கண்டித்துள்ளார். ஆனால், சிரியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தாங்கள் தலையிடமாட்டோம் என கூறி நழுவியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக சிரியாவுடன் நட்புறவு கொண்டிருந்த கல்ஃப் கோஆப்பரேசன் கவுன்சிலும் அந்நாட்டின் நடவடிக்கையை எதிர்ப்பு தெரிவித்தது பஸ்ஸாருல் ஆஸாத் அரசுக்கு பலத்த நெருக்கடியை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.


அதேவேளையில், உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளை மீறியும் சிரியாவின் பஸ்ஸாருல் ஆஸாத் அரசு ராணுவ காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தொடர்வதாக செய்திகள் கூறுகின்றன. டையர் எஸ்ஸோரில் திங்கள் கிழமையும் ராணுவத்தின் அட்டூழியம் தொடர்வதாக மனித உரிமை அமைப்பான சிரியன் அப்ஸர்வேட்டரியின் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.


திங்கள் கிழமை இங்கு ஒரு பெண்ணையும், இரண்டு குழந்தைகளையும் ராணுவத்தினர் படுகொலைச் செய்துள்ளனர். இப்பகுதியிலிருந்து ஏராளமானோர் கொலைச் செய்யப்பட்டுள்ளனர். ஏராளமானோர் இப்பகுதியிலிருந்து புலன்பெயர தயாராகி வருகின்றனர். அல்ஜவ்ரா மாவட்டத்திலும் மீரத்துநுஃமானிலும் ராணுவம் நுழைந்துள்ளது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!