animated gif how to

முபாரக் மீதான விசாரணையில் இஸ்ரேலிய ஊடகங்களுக்கு கோபம்

August 07, 2011 |

August 07, 2011.... AL-IHZAN World News

கெய்ரோ:மக்கள் எழுச்சிப் போராட்டத்தினால் பதவியிலிருந்து விலகிய முன்னாள் எகிப்து சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் மீதான விசாரணையில் இஸ்ரேலிய ஊடகங்கள் கடுமையான நிராசையையும், அதிருப்தியையும் வெளியிட்டுள்ளன.


கடந்த புதன்கிழமை துவங்கிய முபாரக் மீதான விசாரணையை உலகின் ஊடகங்கள், நாடுகள், அமைப்புகள் எல்லாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக சித்தரிக்கும் வேளையில் இஸ்ரேலின் ஒரு பிரிவு ஊடகங்கள் இவ்விசாரணைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன...

இஸ்ரேலின் பிரபல செய்தி நெட்வர்க்கான ’சேனல் 10 நியூஸ்’  தான் வெளியிட்ட செய்திகள் மற்றும் விமர்சனங்களில் முபாரக் மீதான விசாரணையை கடுமையான அநீதி என சித்தரித்தது. புதன்கிழமை முபாரக் மீதான விசாரணை துவங்கும் முன்பே முபாரக் ஆதரவாளர்களின் போராட்டங்களையும், கருத்துக்களையும் மட்டுமே இந்த சேனல் ஒளிபரப்பியது. முபாரக்கின் பலகீனமான நிலையை கண்டு கதறி அழும் ஒரு பெண்ணை இந்த சேனல் தொடர்ந்து காண்பித்துக்கொண்டே இருந்தது.


நாட்டில் போராட்டம் வெற்றி பெறாத சூழலில் மக்கள் அவர்களின் தலைவரை காட்டிக்கொடுப்பதாக இந்த சேனலின் செய்தியாளர் கருத்து தெரிவித்துள்ளார்.


இன்னொரு இஸ்ரேல் சேனலான ’சேனல் 2’ தனது அறிக்கையில் அதிகமாக கவனம் செலுத்தியது முபாரக்கின் நோய் தொடர்பான விபரங்களையாகும். முபாரக்கிற்கு மனிதநேயத்தின் அடிப்படையிலான முன்னுரிமை கிடைக்கவில்லை என பிரபல இஸ்ரேலிய நாளிதழான ’மஆரிப்’ கருத்து தெரிவித்துள்ளது.


ஆனால், எகிப்தின் ஊடகங்கள் முபாரக் மீதான விசாரணையை அதிக விளக்கங்களுடனும், முக்கியத்துவத்துடனும் வெளியிட்டன.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!