August 17, 2011.... AL-IHZAN Local News
தற்காலத்துக்கு பொருந்தும் வகையில் முஸ்லிம்களின் திருமணப்பதிவு, விவாகரத்துச் சட்டங்களுக்கு விரைவில் திருத்தங்களை கொண்டுவரவுதள்ளதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெறிவித்தார்.
காதியார்களின் கவுன்ஸிலை தனது அமைச்சில் இன்று சந்தித்த போதே
அமைச்சர் இதைத் தெரிவித்தார். வேறு முஸ்லிம் நாடுகளில் நடைமுறையிலுள்ள காதி சட்டங்களை காதியார்கள் அறிய வேண்டிய தேவையுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்
இலங்கை காதியார்களுக்கு வேறு முஸ்லிம் நாடுகளில் பயிற்சியளிப்பது பற்றி கொழும்பிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களுடன் பேசவுள்ளதாக அவர் மேலும் தெறிவித்தார்...
காதி சட்டங்களுக்கு கொண்டுவரவுள்ள திருத்தங்களை இறுதிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அதை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அவர் அமைச்சு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
காதியார்களின் சம்பள நிலுவையை விரைவில் வழங்க அமைச்சு நடவடிக்கை எடுக்குமென அமைச்சர் உறுதியளித்தார்.காதியார்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளை மீள்பெறும் நீதி சேவை ஆணைக்குழுவின் தீர்மானம் வாபஸ் பெறப்படுமென அமைச்சர் கூறினார்.

0 கருத்துரைகள் :
Post a Comment