animated gif how to

சிரியாவில் 75 எதிர்ப்பாளர்கள் படுகொலை

August 08, 2011 |

August 08, 2011.... AL-IHZAN World News

டமாஸ்கஸ்:அரசு எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்துவரும் சிரியாவில் நேற்று நடந்த ராணுவத்தின் அக்கிரமமான நடவடிக்கையில் 75க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.


கிழக்கு நகரமான தீர் அஸ்ஸூரில் ராணுவம் 55 பேரை படுகொலைச் செய்தது. ராணுவ டாங்குகளும், வாகனங்களும் நேற்று அதிகாலையில் பல்வேறு வழிகளின் மூலமாக நகரத்திற்குள் நுழைந்தன.


அதிபர் பஸ்ஸாருல் ஆஸாதின் ராணுவம் அடக்குமுறையை கையாண்டுவரும் ஹம்ஸிற்கு அடுத்துள்ள ஹுலாவில் 20க்கும் மேற்பட்டோர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்...
குண்டுகளை தொடர்ச்சியாக வீசியவாறு ராணுவம் தீர் அஸ்ஸூரில் நுழைந்தது. ராணுவத்தை தடுப்பதற்கு உள்ளூர்வாசிகள் தயார் செய்து வைத்திருந்த தடுப்புகளை ராணுவம் தகர்த்து எறிந்தது. இதனைத் தொடர்ந்து மஸ்ஜிதுகளிலிருந்து ‘அல்லாஹ் அக்பர்’ என்ற முழக்கம் எழும்பியது.

ராணுவம் சுற்றி வளைத்துள்ளதால் மக்கள் தப்பிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. மருத்துவமனைகள் மூடிக்கிடப்பதால் மஸ்ஜிதுகளின் உள்பகுதியில் தயார் செய்த க்ளீனிக்குகளில் காயமடைந்தவர்களுக்கு சிகிட்சையளிக்கப்படுகிறது. கப்றுஸ்தானிற்கு கொண்டு செல்லமுடியாத உடல்களை பூங்காவில் அடக்கினர். ஒன்பது தினங்களாக ராணுவத்தால் தடை ஏற்படுத்தப்பட்ட நகரத்தில் உணவும், சுத்தமான நீரும் கிடைக்கவில்லை.

அதேவேளையில், அல்ஜூரா நகரத்தில் சில ராணுவத்தினர் சிவிலியன்களை பாதுகாக்க முயன்றதாக செய்திகள் கூறுகின்றன. வெள்ளிக்கிழமை நாட்டின் பல்வேறு நகரங்களில் ராணுவம் 25 பேரை கொலைச்செய்தது. கடந்த வாரம் ஹமாவில் 142 ராணுவத்தின் கொடூர தாக்குதலில் மரணித்தனர்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!