August 03, 2011.... AL-IHZAN Local News
M.ஷாமில் முஹம்மட்
M.ஷாமில் முஹம்மட்
இன்று சிகப்பு ஆகஸ்தில் 21 ஆவது சுஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப் படுகின்றது. இலங்கையில் ஆனந்தத் தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த புலி பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டது. ஆனால் அவர்கள் ஏற்படுத்திய காயங்கள் இன்னும் மாறாத வடுக்களாக நிலைபெற்றுள்ளது.
இலங்கையில் தமிழ் உரிமைப்போராட்டம் ஆயுத போராட்டமாக பரிமாணம் பெற்றது முதல் அதன் இராணுவ இயந்திரத்தின் இயக்கத்துக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்காலில் முற்றுபுள்ளி வைக்கப்படும் வரையும் இலங்கை மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. அதிலும் யுத்தத்துடன் சம்பந்த படாத சமூகம் என்ற வகையில் முஸ்லிம்களுக்கு குறிப்பாக வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு பாரிய அச்சுறுத்தலாகவே இருந்தது.....
முஸ்லிம் புத்திஜீவிகளை, அரசியல்வாதிகளை படுகொலை செய்தல் , கப்பம் கோரல், கடத்தல் , முஸ்லிம் சமூகத்தின் வியாபாரம் , விவசாயம் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தல் என்று தொடங்கிய புலிப் பயங்கரவாதம். முஸ்லிம் இன சுத்திகரிப்புக்கு வழியமைக்கும் கூட்டுப் படுகொலை, சொந்த மண்ணை விட்டு பலவந்தமாக வெளியேற்றுதல், சொத்துகளை பறிமுதல் செய்தல், என்று 1990 இல் உச்ச கட்டத்தை அடைந்தது.
இந்த காலப்பகுதியில் ஆகஸ்ட் 03 இல் காத்தான்குடி மஸ்ஜிதுகளில் 103 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆகஸ்ட் 12 இல் ஏறாவூர் கிராமங்களில் 116 முஸ்லிம் ஆண், பெண் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டனர். ஆகஸ்ட் 06 இல் அம்பாறையில் 33 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டனர். ஆகஸ்ட் 05 இல் அம்பாறை முல்லியங்காட்டில் 17 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டனர். ஆகஸ்ட் 13 இல் வவுனியா முஸ்லிம் கிராமம் ஒன்றில் 9 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆகஸ்ட் 01 இல் அக்கரைபற்று நகரில் 8 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆகஸ்ட் 12 இல் சம்மாந்துரையில் 4 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டனர். என்று பட்டியல் நீண்டு செல்கின்றது. அந்த அளவுக்கு 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முஸ்லிம்களுக்கு எதிராக புலிகளின் பயங்கரவாதம் வடக்கிலும் கிழக்கிலும் உச்ச கட்டத்தை எட்டியிருந்தது.
இங்கு குறிபிடப்பட்ட படுகொலைகள் அல்லாத வேறு பல படுகொலைகளும் , ஆள் கடத்தல் , கப்பம் கோரல், கிராமங்களை விட்டும் முஸ்லிம்களை துரத்தி அடித்தல், சொத்துக்களை கொள்ளையடித்தல் என்று பல பயங்கரவாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கிழகிற்கு வெளியில் வட மாகாணத்தின் மன்னார் பிரதேசத்திலும் துடிப்பான வாலிபர்களை கடத்தி படுகொலை செய்தல் , கப்பம் கோரல் , விவசாயம் செய்யவிடாது தடுத்தல், என்ற பல விடயங்கள் அரங்கேறின. இந்த காலப் பகுதியில் கிழக்கில் பல சிங்கள கிராமங்களும் தாக்கப்பட்டது அதில் ஒரு கிராமத்தில் 40 பேர் படு கொலையும் செய்யப்பட்டிருந்தனர் .
இந்த தொடரான சம்பவங்கள் கூட்டு படுகொலைகள் குறிப்பாக காத்தான்குடி மஸ்ஜிதுகள் மீதான பயங்கரவாத தாக்குதல். ஆகஸ்ட் 12 இல் ஏறாவூர் கிராமங்களில் 116 பேர் படுகொலை செய்யப்பட்டமை இதற்கு முன்னரான ஜூலை மாதத்தில் மக்காவுக்கு ஹஜ் யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த 68 முஸ்லிம்களை குருக்கள் மடம் பகுதியில் வைத்து வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டமை போன்ற சம்பவங்கள் இலங்கையின் மூன்று பிரதான சமூகங்களில் அமைதியான சமூகமான இனம் காணப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் இருப்புக்கு பாரிய சவால்கள் தோன்றிவிட்டதை தெளிவாக உணர்த்தியது.
இது பல விவாதங்களை முஸ்லிம் சமூகத்தில் தோற்றுவித்தது இலங்கையில் ஆயுதம் ஏந்தாத சமூகமான முஸ்லிம் சமூகத்தின் இருப்புக்கு மிக பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதையும் அதை வெற்றி கொள்ளும் வழிமுறைகள் பற்றி தீவிரமாக சிந்திக்கவும் செயலாற்றவும் முஸ்லிம் சமூகம் தயாரானது.
1990 ஆம் ஆண்டு அதிலும் ஆகஸ்ட் மாதம் இரத்த வெள்ளம் ஓடிய மாதமாக இருந்தது. இது தொடர்பாக பல மட்டங்களில் குழுநிலை வாதங்கள் இடம்பெற்றன புலிகளின் நேரடியான பயங்கரவாத அச்சுறுதைகளை எதிர்கொள்வதற்கு பொருத்தமான முடிவுகளை கண்டு அதை நோக்கி முஸ்லிம் சமூகத்தின் ஒரு சாரார் செயலாற்றவும் நிர்பந்திக்கப்பட்டிருந்தனர். அதனால் தான் இந்த ஆகஸ்ட் மாதம் சிகப்பு ஆகஸ்து என்றும் அழைக்கப்படுகின்றது.
இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு பேரவலம் ஏற்பட 1990 ஆம் ஆண்டில் கிழக்குமாகாண மஸ்ஜிதுகளிலும், கிராமங்களிலும் இரத்தவெள்ளம் பாய்ந்தோடியது. மஸ்ஜிதுகளிலும், கிராமங்களிலும் ஜனாசாக்கள் மலைபோல குவிந்து கிடந்தது. இந்த கொடிய நினைவுகளின் மையமான ஆகஸ்ட் மூன்றாவது நாளை இலங்கை முஸ்லிம்கள் ஸுஹதாகள் தினமாக பிரகடனப்படுத்தி நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
03-08-1990 காத்தான்குடி மீரா ஜும்மா பள்ளிவாசலிலும் ஹுசைனியா தைக்காவிலும் தொழுகையிலீடுபட்டு கொண்டிருந்த முஸ்லிம்கள் 103 பேர் பாசிசப் புலி பயங்கரவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்டனர். ஏறாவூரை அண்டிய ஜயன்கேணி, சதாம் ஹுசைன் கிராமம் போன்றவற்றில் உறக்கத்திலிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கற்பிணிகள் என்று 116 பேர் வெட்டியும், கொத்தியும், சுட்டும் கொல்லப்பட்டனர்.
1990 இல் புலி பயங்கரவாதம் கிழக்கு மாகாணத்தில் பொத்துவில் , அக்கரைப்பற்று, ஒலுவில், நிந்தவூர் ,சாய்ந்தமருது, மறுத்தமுனை கல்முனை ,காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிண்ணியா, மூதூர் முஸ்லிம்கள் மீது மிகப்பெரியளவிலான பாசிச பயங்கரவாதத்தை ஏவி அவர்களை வெளியேற்ற முயன்றது. கிழக்கின் பல முஸ்லிம் கிராமங்கள் 4 வருடங்களுக்கு மேலாக, புலிகளின் பாசிச பயங்கரவாத முற்றுகைக்குள்ளேயே இருந்தன. இக்கால பகுதில் பல பாசிச கொலை வெறியாட்டங்கள் அரங்கேறின அவைகள் பல முறையாக ஆவணப் படுத்தப்படவும் இல்லை என்பது குறிபிடத்தக்கது.
ஆனால் இன்று பயங்கரவாத வெறியாட்டம் போட்ட பாசிச பயங்கரவாத புலிகளின் இராணுவ இயந்திரம் அழிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பயங்கரவாத அமைப்பு ஏற்படுத்தி விட்டுள்ள காயங்களின் வடுக்கள் அனைத்து சமூகங்களிலும் நிலைபெற்றுள்ளது. தமிழ் சமூகம் தாம் வளர்த்து விட்ட பயங்கரவாதத்தின் விளைவுகளை இன்னும் அனுபவித்து கொண்டிருகின்றது. அவர்கள் தமது உரிமை போராட்டம் எது பயங்கரவாத போராட்டம் எது என்பதை விளங்க தொடங்கியுள்ளார்கள். அதேவேளை அரசு தரப்பு விட்டுகொடுக்க முடியாது என்ற பிடிவாதம் தொடர்ந்தும் பொறுத்த மற்ற அணுகுமுறையாக இருக்கும் என்பதை உணர தொடங்கியுள்ளது. அப்படித்தான் சில வெளிப்பாடுகள் காட்டுகின்றது , முஸ்லிம் சமூகம் இரு சமூகங்களுடனும் கலந்து சுமுகமாக வாழ முயற்சிகளை செய்கின்றது.
ஆனால் மறுபுறத்தில் முஸ்லிம் சமூகத்துக்குள் பிரதேசவாதம் பெரும் விசமாக பரவிவருகின்றது கிழக்கு மாகாணத்தில் அதன் செல்வாக்கு அதிகரித்து பிளவுகளுக்கு வழிவிட்டுள்ளது. அதேபோன்று இலங்கையின் பல பிரதேசங்களில் பிரதேசவாத சிந்தனை இஸ்லாமிய தரப்பையும் அவர்களே அறியாதவகையில் ஆற்கொண்டுள்ளது. என்பது இன்று முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள மிக பாரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இதற்கும் புலி பயங்கரவாதம் ஒரு பிரதான காரணமாக இருக்கிறது.
இன்று புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் சிகப்பு ஆகஸ்தில் 21 ஆவது சுஹதாக்கள் தினத்தை அனுஷ்டிக்கும் முஸ்லிம் சமூகம் பிரதேசவாதம் என்ற பெரும் பயங்கரவாதத்தில் இருந்து தன்னை பாதுகாக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
முஸ்லிம் சமூகம் என்பது ஒன்று என்பதும் அது பிரதேசம் , மொழி , இனம் என்ற சாக்கடைக்குள் விழுந்து விடாமல் பாதுகாக்கப் படவேண்டும் என்பதும் இன்று எனக்கு முன் இருக்கும் பாரிய சவால். முஸ்லிம் சமூகம் ஒன்றுமை படவேண்டும் நாம் ஒரு உம்மாஹ் என்ற கோட்பாட்டை முழுமையாக ஏற்றுகொள்ள வேண்டும். இஸ்லாமிய கொள்கைவாதிகள் போதிப்பது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் இருக்கக் கூடாது. ஒரு கொள்கைவாதி எப்போதும் ஒரு கொள்கைவாதியாக மட்டும் இருக்கவேண்டும் பிரதேச வேறுபாடுகளை களைந்து ஒன்று பட்டு சவால்களை முறியடிக்க வேண்டும் என்பதுதான் இன்று எமக்கு முன் இருக்கும் பயங்கரவாத சவால் .
மகிழ்ச்சியான விடயம் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா பலம் பெற்றுவருகின்றது அண்மைகாலமாக பல ஆக்கபூர்வமான விடயங்களை செய்து வருகின்றது . அதேவேளை அகில இலங்கை ஜம்இயதுல் உலமா தன்னை கட்டமைப்பு ரீதியாகவும் பலப் படுத்த வேண்டும், அதன் கிளைகளின் உறுப்பினர்கள் ,அதன் கிளை தலைவர்கள் தெரிவு செய்யப்படும் முறையில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா தரப்படுதும் முறை ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும். இதன் மூலம் அதன் கிளைகளில் பொருத்தமற்றவர்கள் பொறுப்புகள் வகிப்பதையும் அவர்கள் சமூகத்தை தவறாக வழிநடத்துவதையும் தவிர்க்க முடியும்.
உதாரணமாக ஒரு பிரதேசத்தின் அரசியல் வாதிகளுக்கு பயப்படுபவர்கள் பொறுப்பில் அமர்ந்து கொண்டாள் கிளை பயனற்றதாக இருக்கும் அவர்களை மீறி இவர்களால் சமுகத்திற்கு எந்த நண்மையையும் செய்யமுடியாது. அதேபோல் பிரதேசத்தின் அரசியல்வாதிகள் வழங்கும் சலுகைகளையும் அன்பளிப்புகளையும் எதிர்பார்த்து செயல்படுபவர்களாலும் அவர்களை எதிர்த்து செயல்படமுடியாது. அங்கு இவ்வாறான பலவீனங்களுக்கு உட்படாத அல்லாஹ்வுக்கு மட்டும் பயப்படுகின்ற எப்போதும் சமூகத்தின் ஒன்றுமைக்கும் , சுமுகமான நிலைமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இஸ்லாம் போதிக்கும் சமூக ஒன்றுமை கோட்பாடுகளை தனது பிரதேசத்தையும் அதன் அரசியல் வாதிகளை விடவும் மேலாக மதிக்கின்ற நபர்கள் கிளைகளின் உறுப்பினராகவும் பொறுப்பாளர்களாகவும் தெரிவு செய்யப் படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இதன் ஊடாக பல பிரதேசவாத சிந்தனைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் பதில் வழங்க முடியும் .
முஸ்லிம் சமூகத்தில் சமூக நோய்களுக்கு உட்படாத தூய்மையான மனிதர்கள் குறிப்பாக இஸ்லாமிய கொள்கைவாதிகள் வளர்ந்து வரும் புதிய பயங்காரவாதத்தை எதிர்கொள்ள தம்மை ஒழுங்கு படுத்திகொள்ளவேண்டும், அதேவேளை அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவும் தன்னை கட்டமைப்பு ரீதியில் தன்னை உறுதிப்படுத்தி கொள்ள நடவடிக்கைகளை எடுக்க முன்வரவேண்டும், தனது கிளைகள் செயல்படும் , செயல்படாது இருக்கும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
உதாரணமாக புத்தளம் மர்ஹூம் ராசிக் விடயத்தில் புத்தளம் ஜம்இயதுல் உலமா செயல்படுகின்ற முறைதொடர்பிலும் , அதேநேரம் மன்னார் ஜம்இயதுல் உலமா மௌனமா இருப்பதாக தெரிவிக்கப்படும் விமர்சனம் தொடர்பிலும் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா கவனம் செலுத்த வேண்டும். குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்கள் குற்றவாளியாக மட்டும் பார்க்கப் படவேண்டும் ஜம்இயதுல் உலமாவின் ஒரு கிளை குற்றவாளியை தேடும் முயற்சியிலும் மற்ற கிளை அதை பாதுகாக்கும் முயற்சியிலும் அல்லது அந்த குற்றம் தொடர்பில் மௌனமா இருக்கும் நிலைபாட்டிலும் இருக்குமாக இருந்தால் அதுவே பிளவுகக்ளுகான அடிப்படையாக மாறிவிடும் மிக கூடிய கவனம் தேவை. பயங்கரவாதம் இன்று எங்கள் உள்ளங்களில்.
News: Lankamuslim
0 கருத்துரைகள் :
Post a Comment