July 31, 2011.... AL-IHZAN Local News
மட்டகளப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்தில் சர்வதேச மட்டத்தில் பிரபல்யமான உம்முல் குரா பல்கலைக்கழகத்தின் கிளை ஒன்றினை திறப்பதற்குத் நடவடிக்கைகளை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுவூதி மக்காவில் மூன்று பாரிய வளாகங்களை கொண்டுள்ள பல்கலை கழகம் ஏககாலத்தில் இஸ்லாமிய ஷரியா , மற்றும் மருத்துவம் , பொறியியல் ஆகிய பல்வேறு துறைகளில் பட்ட படிப்பு , பட்ட பின்படிப்பு , நிபுணத்துவ கற்கை , முதுமாணி கற்கை போன்றவற்றி வழங்கிவருகின்றது என்பது குறிபிடத்தக்கது.
மலேசியாவில் மாத்திரமே கிளையினைக் கொண்டுள்ள சவூதி உம்முல் குரா பல்கலைக்கழம் காத்தான்குடியில் மற்றுமொரு கிளையைத் திறக்க முன்வந்திருப்பதானது நமது ஊருக்குக் கிடைத்த ஒரு சிறந்த சந்தர்ப்பம் எனச் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் இதற்கான இடம் ஒன்றை பெற்றுகொள்வவதற்கான முயற்சில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
RSS Feed
July 31, 2011
|




0 கருத்துரைகள் :
Post a Comment