July 22, 2011.... AL-IHZAN World News
கடற்கரை பகுதிகளை கண்காணிக்கவும், எதிரி படைகளின் தொலைத்தொடர்பு வசதிகளை துண்டிக்கவும், பாக்., தனது கடற்படைக்காக ஆளில்லா கண்காணிப்பு விமானத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானிலேயே தயாரிக்கப்பட்ட யூகாப்-2 என்ற பெயருள்ள இந்த ஆளில்லா கண்காணிப்பு விமானத்தில், உணர்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அமெரிக்க கண்காணிப்பு விமானம் போல் இதை தரையிலிருந்து இயக்க முடியும்.
இதன் அறிமுக விழா, கராச்சியில் உள்ள பி.என்.எஸ்., மெஹ்ரம் விமானப்படை தளத்தில் நடந்தது. கடற்படைத் தலைவர் அட்மிரல் நோமேன் பஷீர், விமானத்தை இயக்கி வைத்தார்.
0 கருத்துரைகள் :
Post a Comment