animated gif how to

மாணவர் தலைமைத்துவப் பயிற்சியின் பின்னர் மேலும் ஒரு பயிற்சி

July 21, 2011 |

July 21, 2011.... AL-IHZAN Local News

தலைமைத்துவப் பயிற்சியை முடித்து கொண்ட பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான மாணவர்களுக்கு  மேலும் ஒரு பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகி தலைமைத்துவப் பயிற்சி பெற்ற மாணவர்களின் ஆங்கில மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவை மேலும் விருத்தியடையச் செய்வதற்கு விசேட பாடநெறியொன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தலைமைத்துவப் பயிற்சி பெற்று வெளியேறிய முதலாவது தொகுதி மாணவர்களுக்கான பயிற்சிநெறி நேற்றுமுதல் ஆரம்பமாகியுள்ளது எனவும், இரண்டாம் தொகுதி மாணவர்களுக்கான பயிற்சிநெறி விரைவில் ஆரம்பமாகும் என்றும் தெரிவித்துள்ளார்...
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நேற்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத்தெரிவித்தபோதே அமைச்சர் இத்தகவல்களை வெளியிட்டார்.
News: Lankamuslim

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!