animated gif how to

சோமாலியாவில் 37 இலட்சம் முஸ்லிம்கள் பசியின் கொடுமையில்

July 21, 2011 |

July 21, 2011.... AL-IHZAN World News
சோமாலியாவில் 3.7 மில்லியன் பேர் உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி பஞ்சத்தால் வாடி வருவதாக ஐ.நா. அறிவித்துள்ளது. இதில் அல் ஷபாப் ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டிலுள்ள தென் சோமாலியா பகுதியில் மாத்திரம் 2.8 மில்லியன் பேர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. மேற்கொண்டுள்ள கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது.


கிழக்கு ஆபிரிக்க நாடுகளான சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் கென்யாவில் வரலாறு காணாத வரட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் உணவு தேடி இடம்பெயர்ந்து வருகின்றனர். இதில் சோமாலியா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சோமாலியாவில் ஏற்பட்டுள்ள வரட்சிநிலை குறித்த அறிவிப்பை ஐ.நா. வெளியிட்டுள்ளது. இதன்படி சோமாலியாவின் மொத்த சனத்தொகையின் பாதிப்பேர், அதாவது 3.7 மில்லியன் பேர் இந்த வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது...

இதில் அல் கொய்தா அமைப்பின் பின்னணியைக்கொண்ட அல்- ஷபாப் ஆயுதக்குழுவினர் கட்டுப்பாட்டிலுள்ள தென் பகூல் மற்றும் ஷபெல்லே பகுதிகளில் உள்ள 2.8 மில்லியன் பேர் பஞ்சத்தில் வாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சோமாலியாவில் இருந்து உணவு தேடி நாளொன்றுக்கு 5000 பேர் ஆளவில் அண்மையிலுள்ள கென்யா மற்றும் எத்தியோப்பியா அகதி முகாம்களுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

இவர்களில் பெரும்பாலோனோர் கென்யாவில் அமைக்கப்பட்டுள்ள டெடாப் அகதி முகாமுக்கு வருகை தருகின்றனர். உலகிலேயே மிகப் பெரிய அகதி முகாமாக கருதப்படும் இதில் சுமார் 90,000 பேர் தங்குவதற்கே வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், தற்போது இங்கு 400,000 பேரளவில் உள்ளதாக ஐ. நா கூறியுள்ளது.

கிழக்கு ஆபிரிக்காவில் ஏற்பட்டுள்ள வரட்சி நிலை காரணமாக கென்யா, எதியோப்பியா, சோமாலியா, உகண்டா மற்றும் டிஜிபெளடி நாடுகளில் மொத்தமாக 11 மில்லியன் பேர் அளவில் பஞ்சத்தால் வாடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!