animated gif how to

அரபுலகில் ஒபாமாவின் புகழ் மங்கியதாக ஆய்வில் தகவல்

July 15, 2011 |

July 15, 2011.... AL-IHZAN World  News

வாஷிங்டன்:அரபுகளுக்கு இடையே அமெரிக்காவின் அதிபர் பாரக் ஒபாமாவின் மீதான நம்பிக்கை பெருமளவில் குறைந்துவிட்டதாக சர்வே தெரிவிக்கிறது. எகிப்து, ஜோர்டான், மொராக்கோ, சவூதி அரேபியா, யு.ஏ.இ ஆகிய நாடுகளில் நடந்த சர்வேயின் முடிவுகளை அரபு-அமெரிக்க ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்டது.
2009-ஆம் ஆண்டு கெய்ரோவில் வைத்து முஸ்லிம்களுடனான உறவில் ’புதிய துவக்கம்’ என அறிவித்த ஒபாமாவால் நீதியை நிலைநாட்ட இயலவில்லை என பெரும்பாலான அரபுக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஃபலஸ்தீன் நாடும், ஈரானுடனான ஒத்துழைப்பு உள்ளிட்ட மேற்காசியாவிற்காக புதிய அமெரிக்க கொள்கைகள் வகுக்கப்படும் எனவும், முஸ்லிம் உலகமும், அமெரிக்காவிற்கும் இடையேயான இடைவெளி முடிவுக்கு கொண்டுவரப்படும் எனவும் கெய்ரோ உரையில் ஒபாமா அறிவித்திருந்தார்...

ஆனால், ஒபாமா அரசினால் மேற்காசியா பிரச்சனைகளுக்கு தீர்வு காணவோ, அவர்களுடன் உறவை ஏற்படுத்துவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்க இயலவில்லை என சர்வே கூறுகிறது. ஃபலஸ்தீன் விவகாரத்தை கையாளுவதிலும், முஸ்லிம் உலகத்துடனான உறவை மேம்படுத்துவதிலும் அமெரிக்கா தோல்வியடைந்துவிட்டதாக சர்வே கூறுகிறது. இவ்விஷயத்தில் ஒபாமாவிற்கு மிகக்குறைந்த வாக்குகளே கிடைத்துள்ளன.
ஒபாமாவுக்கும், அமெரிக்காவிற்கும் 30 சதவீத வாக்குகளை அளித்த சவூதி அரேபியா அமெரிக்க ஆதரவில் முன்னணியில் உள்ளது. ஆனால் எகிப்தில் வெறும் ஐந்து சதவீத நபர்களே அமெரிக்காவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.


0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!