animated gif how to

திரிபோலியை தகர்க்க கடாபி திட்டம்! ரஷ்யா அதிர்ச்சி தகவல்

July 15, 2011 |

July 15, 2011.... AL-IHZAN World  News
"லிபியா தலைநகர் திரிபோலியை, கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினால், ஏவுகணை தாக்குதல் நடத்தி, அந்நகரையே முற்றிலும் அழிக்க அதிபர் கடாபி திட்டமிட்டுள்ளார்.

லிபிய அதிபர் கடாபியிடம் இன்னும் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் உள்ளன. இதுவரை நடந்த தாக்குதல்களில் ஏவுகணைகளை மட்டும் கடாபி பயன்படுத்தவில்லை என லிபியாவுக்கான ரஷ்யாவின் சிறப்பு தூதர் மிக்கெயில் மர்கெலோவ் கூறினார்.
லிபியா தலைவர் கடாபிக்கு எதிராக, நடந்து வரும் கிளர்ச்சியில் நேட்டோ படைகளுடன் சண்டையிட்டு வரும் லிபியா அரசுக்கு, தற்போது பல வழிகளிலும் சிக்கல் எழுந்துள்ளது. கடாபிக்கு அளித்து வந்த ஆதரவை கடந்த, 4ம் தேதி, துருக்கி அரசு வாபஸ் பெற்றது. இதனால், கடாபிக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. துருக்கியில் உள்ள துருக்கி - லிபியா வங்கியில், லிபியா அரசின் பணம் சேமிக்கப்பட்டிருந்தது. இந்தப் பணத்தை எடுக்க முடியாத சூழ்நிலை, கடாபிக்கு தற்போது ஏற்பட்டுள்ளது...

சமீபத்தில், லிபியா அரசின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை, கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டு வைத்து தகர்த்தனர். இதனால், விரைவில் லிபியாவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், லிபியாவின் மேற்கில் உள்ள குவாலிஷ் நகரையும் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில்தான் லிபியாவிற்கான ரஷ்யாவின் சிறப்பு தூதர் மிக்கேல் மெர்கெலோவ் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது ரஷ்ய பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ளது. அதில், மெர்கெலோவ்,  தலைநகர் டிரிபோலி, கிளர்ச்சியாளர்கள் கையில் வீழ்ந்தால், தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி, டிரிபோலியை தகர்க்க திட்டமிட்டுள்ளார். இதை, கடாபியே என்னிடம் தெரிவித்தார் என்றும் கூறியுள்ளார்.
அதிபர் கடாபி இதுவரை ஏவுகணைகள் எதையும், கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பயன்படுத்தவில்லை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!