July 23, 2011.... AL-IHZAN Local News
தேர்தல் நடத்தப்படாது ஒத்தி வைக்கப்பட்டிருந்த 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப் பதிவுகள் ஆரம்பமாகி பிற்பகல் நான்கு மணி வரை இடம்பெறும்.
ஒரு மாநகர சபை, ஒன்பது நகர சபைகள், 55 பிரதேச சபைகளுக்கே இன்று தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
தேர்தல்களுக்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள் ளப்பட்டுள்ளன. நேரகாலத் தோடு வாக்குச் சாவடி களுக்குச் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணை யாளர் மஹிந்த தேசப்பிரிய வேண் டுகோள் விடுத்துள்ளார்.
65 உள்ளூராட்சி சபைகளிலும் நடைபெறும் தேர்தலில் 26 இலட்சத்து 30 ஆயிரத்து 985 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். இதன் மூலம் 875 உறுப்பினர்கள் தெரிவு செய் யப்படவுள்ளனர்.
5619 பேர் இந்த 65 சபைகளிலும் போட்டியிடுகின்றனர். 20 அரசியல் கட்சிகள், 72 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் இவர்கள் களத்தில் குதித்துள்ளனர்.
தேர்தல் நடைபெறும் பிரதேசங் களிலுள்ள சகல மக்களும் வாக்களிப்பதற்கு ஏதுவாக 2,226 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை 383 நிலையங்களில் வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் கூறினார்.

0 கருத்துரைகள் :
Post a Comment