July 23, 2011.... AL-IHZAN World News
நோர்வேயின் தலைநகரமான ஓஸ்லோவில் சனிக்கிழமை அதிகாலை நடந்த குண்டுவெடிப்புகளில் 87 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோருக்கு காயமேற்பட்டுள்ளது.
ஓஸ்லோ நகரத்தின் இதய பகுதியில் முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இரண்டாவது குண்டு ஓஸ்லோவுக்கு வெளியே ஆளுங்கட்சியான லேபர் கட்சியின் இளைஞர் முகாம் நடக்கும் இடத்தில் நடந்தது. முகாமில் 700க்கும் அதிகமானோர் பங்கெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக 32 வயதான ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
ஓஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பில்(படங்கள் இணைப்பு)...
ஏழுபேரும், லேபர் இளைஞர் முகாம் நடந்த உட்டோயா தீவில் நடந்த குண்டுவெடிப்பில் 80 பேரும் கொல்லப்பட்டனர். 900க்கும் அதிகமான நபர்கள் நகரத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் காயமடைந்து சிகிட்சை பெற்று வருகின்றனர்.
போலீசாரால் கைதுச் செய்யப்பட்ட நபரின் சட்டையில் போலீசாரின் சின்னம் இடம் பெற்றிருந்தது. ஓஸ்லோ நகரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பிரதமரின் அலுவலகத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
1 கருத்துரைகள் :
அண்மையில் நோர்வேயில் நடந்த குண்டுவெடிப்பும் படுகொலையும் ஐரோப்பாவை மட்டுமல்ல முழு உலகத்தையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றன. அல்கைதா தான் இந்த உலகின் ஒரே பயங்கரவாதிகள் என்ற மேற்கத்திய ஊடகங்கள் இதுவரை பரப்பி வந்த பூச்சாண்டிக் கதைகளை இது தகர்த்துள்ளது. தமது சொந்த மக்களைச் சுரண்டவும், மூன்றாம் உலக நாடுகளை சூறையாடவும்திரை மறைவில் நிறவெறியைக் கக்கி, இஸ்லாமிய எதிர்ப்பை முன்னிறுத்தித்தான் மேற்குலகில் தேர்தலில் வென்று ஆட்சி நடாத்துகின்றார்கள். .
நோர்வேயில் குண்டுவெடிப்பும் படுகொலையும் நடந்தவுடன், இஸ்லாமிய பயங்கரவாதம்தான் அதற்கு காரணம் என மேற்குலக கிறிஸ்தவ ஊடகங்கள் செய்திகள் பரப்பின. படுகொலைகளை நடாத்திய பயங்கரவாதி பிடிபட்டபின் இந்தப் பயங்கரவாதியை உருவாக்கியது மேற்கத்திய ஆட்சியாளர்கள்தான் என்ற உண்மையை மூடிமறைத்து இந்தப் பயங்கரவாதத்தை தூண்டியதற்கு தாங்கள் பாத்திரவாளிகள் அல்ல என்று நம்பவைப்பதற்காக தற்போது இதனை தனிப்பட்ட ஒருவரின் கொடூரமான செயலாக, வழிதவறிய மந்தையின் செயலாக, மேற்கத்திய கிறிஸ்தவ ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. படுகொலைகளை நடாத்திய பயங்கரவாதி ஒரு மனநோயாளியாக இருக்கலாம் என்று கூட இந்த மேற்கத்திய கிறிஸ்தவ ஊடகங்கள் ஊகங்களை வெளியிடுகின்றன.
நல்லையா தயாபரன்
Post a Comment