July 19, 2011.... AL-IHZAN World News
பாகிஸ்தானை சேர்ந்த தலிபான்கள் “லைவ்லீக்” என்ற இணைய தளத்தில் வீடியோ காட்சியை வெளியிட்டனர். அதில் பாகிஸ்தானை சேர்ந்த 16 போலீசார் மலைப் பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் கைகள் பின்புறமாக மடக்கி வைத்து கட்டப்பட்டிருந்தது. அவர்களின் முகம் பீதியில் உறைந்திருந்தது.
இந்த நிலையில் முகத்தை துணியால் மறைத்தபடி 4 தலிபான்கள் அவர்கள் முன்பு துப்பாக்கியுடன் இருந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் சுவாத் பள்ளத்தாக்கில் 6 அப்பாவி குழந்தைகளை கொன்றதாக இவர்கள் மீது குற்றப்பத்திரிகை வாசிக்கப்படுகிறது. அதற்கு தண்டனையாக அவர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என தீர்ப்பு அளிக்கப்படுகிறது(வீடியோ இணைப்பு).
அதை தொடர்ந்து அவர்களை துப்பாக்கியால் சுட்டு கொல்கின்றனர். துப்பாக்கி குண்டு பாய்ந்த போலீசார் அப்படியே மண்ணில் சாய்கின்றனர். இந்த காட்சிகள் உண்மை. சுட்டுக்கொல்லப்பட்டது போலீசார்தான் என பாகிஸ்தான் ராணுவம் ஒப்புக் கொண்டது. கடந்த மாதம் (ஜூன்) 1-ந் தேதி ஆப்கானிஸ்தான் எல்லையில் கைபர்-பக்துன்கலா மாகாணத்தில் அப்பர் டிர் என்ற இடத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடியில் தலிபான்கள் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். அதில், 27 போலீசாரும், 40 தலிபான்கள்களும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் 16 போலீசாரை காணவில்லை. அவர்களை தலிபான்கள் கடத்தி சென்ற சுட்டுக் கொன்றுள்ளனர். கொல்லப்பட்ட பின் அவர்களது உடல்களை அப்படியே போட்டு விட்டு சென்றனர். இந்த தகவலை ராணுவ தலைமை செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அத்தார் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால் 16 போலீசாரை காணவில்லை. அவர்களை தலிபான்கள் கடத்தி சென்ற சுட்டுக் கொன்றுள்ளனர். கொல்லப்பட்ட பின் அவர்களது உடல்களை அப்படியே போட்டு விட்டு சென்றனர். இந்த தகவலை ராணுவ தலைமை செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அத்தார் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள் :
Post a Comment