animated gif how to

புதிய முனைப்புடன் உருவாகிவரும் மேலாதிக்க போட்டி இலங்கை முஸ்லிம்களை நேரடியாக பாதிக்குமா ?

June 18, 2011 |

June 18, 2011.... AL-IHZAN Local News

M.ஷாமில் முஹம்மட் அவர்கள் எழுதி lankamuslim.org யில் கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வெளியான ‘புது முனைப்புடன் உருவாகிவரும் மேலாதிக்க போட்டி இலங்கை முஸ்லிம்களை நேரடியாக பாதிக்குமா?’ என்ற தலையில் வெளியான கட்டுரை இன்று18.06.2011 இல் மீள் பதிவு செய்யப்படுகின்றது'
M.ஷாமில் முஹம்மட்
இந்திய மேலாதிக்கதின் எல்லைக்கு அருகே புதிதாக 27 யுத்த விமானத் தளங்களை அமைக்கும் பணியில் சீனா மேலாதிக்கம் ஈடுபட்டுள்ளது. இந்தியா பிராந்திய மேலாதிக்க தாகம் கொண்ட சக்தி என்றால் சீனா சர்வதேச மேலாதிக்க தாகம் கொண்ட சக்திகளில் ஒன்று இந்த இரண்டு மேலாதிக்க சக்திகளும் முஸ்லிம்களை பொறுத்தவரையும் பாசிச மேலாதிக்க தன்மையை நிரூபித்து கொண்டிருப்பவை இந்த இரண்டு பாசிச மேலாதிக்க சக்திகளும் விரிவாக முஸ்லிம் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து நில கற்பழிப்பு செய்து வருகின்றது.
இந்தியா பாசிச மேலாதிக்கம் கஷ்மிரையும் சீனா பாசிச மேலாதிக்கம் சிங்கியாங்கையும் தமது பாசிச மேலாதிக்க வேட்டை பற்களின் இடையில் கவ்வி வைத்துள்ளன அதன் வேட்டை பற்களின் கூர்மைகளிற்கிடையில் கஷ்மீரும், சிங்கியாங்கும் சதையும், ரத்தமுமாக கசிந்து கொண்டிருக்கிறது பிராந்தியத்தில் இரு நாடுகளிலும் முஸ்லிம் தேசங்கள் சிக்கி தவித்து கொண்டிருப்பது பற்றி பேசுவது இலங்கையில் சிலரின் பார்வையில் தேவையற்றதாக தெரியலாம் ஆனால் உண்மைகளை எவரும் மறுக்க முடியாது .,,,
தற்போது புது முனைப்புடன் இரு சக்திகளும் மேலாதிக்க போட்டியை முனைப்புடன் செய்து வருகின்றன . இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் தமக்குச் சொந்தமான பகுதி என்று சீனா கூறி வருகிறது. இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீரில் லடாக் பகுதியில் சில மாதங்களுக்கு முன் சீன இராணுவம் இந்தியாவின் ஆக்கிரமிப்பு பகுதில் ஊடுருவினர் எனச் செய்திகள் வெளியானது. கஷ்மீர் லடாக் பகுதியில் இந்தியா ஆக்கிரமிப்பு திட்டத்தின் கீழ் வீதி அமைக்கும் பணி சில தினங்களுக்கு முன்பு சீன இராணுவத்தின் மிரட்டலால் நிறுத்தப்பட்டது .
இரு பெரும் மேலாதிக்க சக்திகளுக்கும் இடையிலான மேலாதிக்க பனிப்போர் வலுவாக உருபெற்று வருகிறது இந்நிலையில் இலங்கை தென் ஆசிய பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ளது.அதற்கு வலுச்சேர்ப்பதாக ஆழமான கடல்பகுதியை கொண்டதுமான திருகோணமலைத்துறைமுகமும் அமைந்துள்ளது
ஏற்கனவே இந்தியா சீனாவுக்கு போட்டியாக இலங்கையை தனது ஆதிக்கத்தில் வைத்துகொள்ள அதாவது சீனா சார்பு போக்கில் இருந்து இலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க தேவையான வகையில் இலங்கையில் தமிழ் ஆயுத போராட்டத்தை பாலூட்டி வளர்த்தது சீனா இந்தியாவுக்கு போட்டியாக பிராந்தியத்தில் முத்து மாலை வடிவிலான தளங்களை அமைத்து வருகின்றது இந்தியா வடக்கு கிழக்கை குறிவைக்க , சீனா தென்பகுதியை குறிவைத்து செயல்படுகின்றது .
இலங்கையை இந்தியா தனது இலங்கை இந்தியா ஒப்பந்தத்தின் ஊடாக கிழக்கின் திருகோணமலை துறைமுகத்தையும் பின்னர் சம்பூரையும் மேலாதிக்கதுகுள் வைத்திருக்க சீனா இலங்கையின் தென்பகுதியில் மிகவும் வலுவான துறைமுகம் ஒன்றை அம்பாந்தோட்டைப் பிரதேசத்தில் சத்தமின்றி நிர்மாணித்துக்கொண்டது சீனா தனது முழுவளங்களுடனும் அம்பாந்தோட்டையில் கட்டமைத்துள்ளது பின்னர் புத்தளம் கட்பிட்டியை இலக்கு வைத்து செயல்படுகின்றது இந்திய மேலாதிக்கம் அதிகமாக எதிரிகளைதான் தனது அயல்களாக உருவாகியுள்ளது.
சீனா ,பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், கஷ்மீர் என அதனை எதிரிநாடுகள் சூழ்ந்துகொண்ட போதும் தென் பகுதியினூடாக இலங்கையை தனது பிடிக்குள் கொண்டுவர இந்தியா எடுத்த முயற்சிகள் பல இதில் இராஜதந்திர வழிமுறைகளுக்கு அப்பால் திரை மறைவில் தனது உளவு அமைப்பான ‘ரோ’ மூலம் இலங்கையின் அமைதியை குழப்பி ஆயுத போராளிகளை உருவாக்கி அந்த ஆயுத போராட்ட அமைப்புகளை தனது ரிமோட் கொன்றோலில் வைத்திருப்பதன் மூலம் இலங்கை அரசை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயன்றது அனால் ஆயுத குழுக்கள் முழுமையாக இந்தியாவின் ஆட்டத்துக்கு தாளம் போட மறுத்தது இலங்கை நாட்டை இரண்டாக பிளந்து இரந்த ஆறு ஓட்ட இந்தியா முக்கிய பங்காற்றியுள்ளது.
அதேநேரம் சீனா இலங்கையை எந்த வகையிலும் பறிகொடுக்க தயாரில்லை எனவே சீனா இலங்கைக்கு நிபந்தைனையற்ற முறையில் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளது திருகோணலைத் துறைமுகம் தொடர்பான கனவில் இந்தியா இருந்த போது கனவில் இருந்த இந்தியாவை திருகோண துறைமுகத்துக்கு போட்டியிட்டு தட்டி எழுப்பி விடாமல் சத்தமின்றி சீனா மிகவும் வலுவான துறைமுகம் ஒன்றை அம்பாந்தோட்டைப் பகுதியில்கட்டமைத்து வருகிறது இது அதி நவீன வசதிகள் கொண்டது . சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியா இலங்கையை தனது மேலாதிக்க பிடியினுள் கொண்டுவர இலங்கையின் பின் புறத்தால் முயல்கின்றது என்றுதான் குறிபிட்ட வேண்டும்
இதுதான் தற்போது நடை பெற்று வருகின்றது மீண்டும் இந்தியா இலங்கையில் உறுதியற்ற தன்மையை தோற்று வித்து தனது மேலாதிக்க பாதங்களை இலங்கையில் ஆழமாக பதிக்க தேவையான சூழ்நிலையை ஏற்படுத்த தனக்கு தலை ஆட்டும் பொம்மை தமிழ் கட்சி ஒன்றை உருவாக்க இலங்கையின் பின் புறத்தால் முயல்கின்றது, இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியாவுடன் மட்டும் உறவை வைத்துகொள்ள தேவையான நகர்வுகளை செய்துள்ளது சில காலத்துக்கு முன்னர் இந்திய புலனாய்வு அமைப்பின் RAW பிரதிநிதி ஒருவர் இலங்கை இராஜதந்திர அதிகாரி ஒருவருக்கு தெரிவித்த கருத்தில் “இந்தியாவுக்கு ஆதரவாக இலங்கையில் எந்தவொரு தமிழ் கட்சியும் இல்லை’ என தெரிவித்திருந்தார் என செய்திகள் வெளியாகியது.
இந்த அவரின் கவலை இந்திய மேலாதிக்கம் இலங்கையில் என்ன செய்ய விரும்புகிறது என்பதை இது சுட்டி காட்டுகிறது, ஈ.என்.டி.எல்.எப்பை பயன்படுத்தி மீண்டும் தலையிட இந்திய முயன்று வருகிறது புலனாகின்றது தனது முழு பராமரிப்பில் இருக்கும் ஈ.என்.டி.எல்.எப். அமைப்பை இதற்காகப் பயன்படுத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும், இது தொடர்பாக ஈ.என்.டி.எல்.எப். தலைவர்கள் சென்னையில் இருந்து புதுடில்லிக்கு அழைக்கப்பட்டு பேச்சுக்கள் மிகவும் இரகசியமாக நடைபெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தமை குறிபிடதக்கது
தற்போது தனக்கு ஆதரவாக இயங்கும் ஈ.என்.டி.எல்.எப்பை பலப்படுத்தும் முயற்சிகளில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்று தெரியவருகின்றது அதற்கு ஏதுவாக தமிழ் நாட்டில் உள்ள இலங்கை தமிழ் மக்கள் தங்கியுள்ள முகாம்களில் இருந்து இளைஞர்களை பலவந்தமாக இந்தியாவின் கட்டுபாட்டில் இயங்கும் ஈ.என்.டி.எல்.எப் யில் இணைத்து வருகின்றது என்றும் . மறுபுறம் அபிவிருத்தி, வர்த்தகம், விவசாயம் வீடமைப்பு என பல துறைகளில் இலங்கையில் கால்பதிக்க முற்பட்டுவருகிறது குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கில் ஆளுமையை அதிகரித்து தனக்கு சாதகமான தமிழ் அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கி இலங்கை அரசை தனது மேலாதிக்க அழுத்ததின் கீழ் வைத்திருக்க நினைக்கிறது.
கிழக்கு இலங்கையில் முஸ்லிம்களின் பெரும்பான்மை முஸ்லிம்களிடம் இருக்கும் தேசிய முஸ்லிம் அரசியல் கட்சி என்பன இந்த புதிய மேலாதிக்க திட்டத்துக்கு பெரும் தடையாக அமைந்திருகிறது என்று விளங்கிக்கொள்ள முடிகின்றது . கிழக்கு முஸ்லிம்களின் பெரும்பான்மையை பலவீன படுத்த இந்திய பல அரசியல் , இராணுவ யுக்திகளை கையாளலாம் இந்த யுக்தியில் ஒன்றுதான் கிழக்குப்பகுதியில் லக் ஷர் – இ – தொய்பா இயக்கம் இதன் மூலம் முஸ்லிம்களை புறம் தள்ளி அரசியல் நகர்வொன்றை எடுக்க இந்தியா முயல்வதாக கூறமுடியும் , புது முனைப்புடன் உருவாகிவரும் மேலாதிக்க போட்டி இலங்கை முஸ்லிம்களை நேரடியாக பாதிக்குமா ? பொருத்து இருந்து அவதானிப்போம்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!