இந்திய - தமிழ்நாட்டு சட்டசபையில் இலங்கைக்கெதிராக இந்தியா பொருளாதார தடையை விதிக்க வேண்டுமென நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முஸ்லிம் காங்கிரஸ் கண்டித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்,எம்.ஹரீஸ் தெரிவித்திருப்பதாவது:
தமிழக சட்டசபையில் இலங்கை அரசுக்கெதிராக மேற்கொள்ளப் பட்ட தீர்மானத்தை வடக்குகிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம் மக்கள் கண்டிக்கின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் அபிவிருத்தி செயற்றிட்டங்களை குழப்பும் வகையிலேயே இந்த கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் பல இந்திய நிறுவனங்கள் முதலிட்டுள்ளன. இந்நிலையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட திர்மானம் மூலம் இந்தியர்களும் பாதிப்படையும் நிலையேற்படும். எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
1 கருத்துரைகள் :
நல்ல விசயம்தான் இவர்களின் கண்டனத்தை இதயபூர்வமானதாக ஏற்றுக்கொள்ளத்தான் தயக்கமாக இருக்கின்றது ஏன் என்றால் எதிரனியில் இருந்தால் வேறுமாதிரியல்லவா சொல்லுவார்கள்.
Post a Comment