June 13, 2011.... AL-IHZAN Local News
முஸ்லிம் சமூகத்தின் வீழ்ச்சி இங்குதான் ஆரம்பமாகின்றது...
இருபதாயிரம் முஸ்லிம் மாணவர்கள் பௌத்தத்தை படிக்கும் நிர்பந்தம் நாட்டின் 20000 முஸ்லிம் மாணவர்கள் பௌத்தத்தை ஒரு பாடமாக பாடசாலைகளில் கற்கின்றனர் இஸ்லாத்தை படிப்தற்கு வாய்ப்பு இல்லாமையால் இவர்கள் பௌத்தத்தை படிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் என அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இந்த மாணவர்கள் பௌத்த சமயத்தை ஒப்பிட்டு தாமாக மேலதிகமாக படிப்பதாக இருந்தால் பிரச்சினை இல்லை. இஸ்லாத்தை கற்பதற்கு வசதியில்லாததால் இவர்கள் பௌத்தத்தை படிக்க நிர்பந்திக்கப் படுகின்றனர் சமூகத்தின் வீழ்ச்சி இங்குதான் ஆரம்பமாகின்றது....
இந்த போக்கினை மாற்றுவதற்கு அரபுக் கல்லூரிகள் பங்களிப்பு செய்யவேண்டும் அரபுக் கல்லூரிகள் அது அமைந்துள்ள பிரதேசங்களின் கடமைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும் ஐந்து லட்சம் முஸ்லிம் மாணவர்களின் இஸ்லாமிய அறிவினை வளர்க்கும் பணியில் அரபு கல்லூரிகள் ஈடுபடுவது இன்றைய தேவையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை அரபு கல்லூரிகள் ஒன்றியம் ஜாமியா நழீமியாவின் அபிவிருத்தி ஆய்வு மற்றும் பயிற்று வித்தலுக்கான நிலையத்துடன் இணைந்து அரபு கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கான பயிற்சி நெறியை முடிதவர்களுகான சான்றிதல்களை வழங்கும் வைபவம் கொழும்பு ரன்முத்து ஹோட்டலில் இடம்பெற்றபோதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள் :
Post a Comment