animated gif how to

வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் கொடூரமிக்கது - பேராசிரியர் அப்துல்லா

June 30, 2011 |

June 30, 2011.... AL-IHZAN Local News

வடக்கில், முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் மற்றும் காத்தான்குடி பள்ளிவாசல் சம்பவங்கள் தம்மை அதிகமாக பாதித்ததன் காரணமாக ஈழப் போராட்டத்திற்கு ஆதரவான தனது நிலைப்பாட்டை தான் கைவிட்டதாக பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள அவர் ஊடகங்களுக்கு இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஆரம்பகாலத்தில் நான் இலங்கையின் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக செயற்பட்டுவந்தேன். எனினும் அக்குழுக்கள் முஸ்லிம்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டபோது, நான் எனது நிலைப்பாட்டினையும் மாற்றிட நேர்ந்தது. வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம், காத்தான்குடி முஸ்லிம்களின் படுகொலை சம்பவங்கள் என்னை அதிகமாக பாதித்தது. இவை மனிதாபிமானத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரம். இவற்றை எவராலும் நியாயப்படுத்த முடியாது...
இக்கொடூரங்களை செய்தவர்களின் முடிவு நிச்சமாக விரும்பத்தகுததாக இருக்கப்போவதில்லை என நான் அப்போதே கூறினேன். அதுபோன்றே எல்லாம் நடந்தும் முடிந்தது. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது அதனை சைவப் புலவர்கள் நியாயப்படுத்தினர். ஆனால் நான் அந்தச் சம்பவங்களை வன்மையாக கண்டித்தேன். அதனை எவலாலும் நியாயப்படுத்தவும் முடீயாதென வாதிட்டேன்.
தமிழகத்தின் பல அரசியல் தலைவர்களிடம் வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் குறித்து நான் அதிருப்தியை வெளியிட்டேன். ஆனால் அவர்கள் அதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை. மனித நேயம் மிக்கவனென்ற முறையிலேயே நான் இச்சம்பவங்களை அன்றே கண்டித்தேன் எனவும் கூறியுள்ளார்.

1 கருத்துரைகள் :

Anonymous said...

சகோதரர்.அப்துல்லா அவர்களுடைய முந்திய நிலைபாட்டிலும் சரி பிந்திய நிலைபாட்டிலும் சரி நானும் அவரின் நிலையை ஒத்தவனாவேன்.

Post a Comment

Flag Counter

Free counters!