animated gif how to

நோன்பு காலத்தில் முஸ்லிம் பாடசாலைகளின் விடுமுறை ரத்து..??

June 30, 2011 |

June 30, 2011.... AL-IHZAN Local News
இலங்கையில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு நோன்பு காலத்தில் வழங்கப்படும் விடுமுறையை ரத்துச்செய்வது குறித்து கல்வியமைச்சு ஆராய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
காலகாலமாக முஸ்லிம் பாடசாலைகளுக்கு நோன்பு காலத்தில் விடுமுறை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையிலேயே கல்வியமைச்சு முஸ்லிம் பாடசாலைகளுக்கான இந்த நோன்புகால விடுமுறையை ரத்துச் செய்வது குறித்து ஆராய்ந்துள்ளது.
கல்வியமைச்சில் புதன்கிழமை மாலை நேரம் இதுகுறித்த முக்கிய கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது. கல்விமைச்சர் பந்துல குணவர்த்தனா தலைமையில் நடைபெற்றுள்ள இக்கலந்துரையாடலில் முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பி.க்கள் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.  எதிர்வரும் நாட்களில் இவ்விடயம் தொடர்பில் கல்வியமைச்சு உலமா சபை பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளது...
அதேநேரம் இத்திட்டத்திற்கு கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயர் ஆஸாத் சாலி தனது வரவேற்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறுpத்து அவர் தெரிவித்துள்ளதாவது,

நோன்பு காலத்தில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமறை அவசியமற்றது என்றே அநேகர் வாதிடுகின்றனர். நோன்பு கால விடுமுறையில் மாணவர்கள் நோன்புடன் வீடுகளில் தூங்குகின்றனர். இதன் மூலம் உரிய பயனை எவரும் அடைவதில்லை. நோன்பு நோற்றவர்களை ஓய்வெடுக்குமாறு இஸ்லாம் ஒருபோதும் வலியுறுத்தவுமில்லை. அநேக முஸ்லிம் நாடுகளில்கூட நோன்பு காலத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை கொடுக்கப்படுவதில்லை. எனவேதான் முஸ்லிம் சமூகத்தின் நன்மைகருதி முஸ்லிம் பாடசாலைகளின் நோன்புகால விடுமுறையை ரத்துச் செய்வது குறித்து பலமாக ஆராயப்படுகிறது என்றார்.
News: Yarlmuslim

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!